‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். நகைச்சுவை, காதல் மற்றும் ட்ரெண்டாகும் கதைகளை தனது படங்களில் சேர்த்து, இயக்கி வெற்றிகரமான இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன், நடிகை க்ரித்தி ஷெட்டி நடிப்பில் ‘Love Insurance Kompany’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தனித்துவமான கதைகளை வித்தியாசமான கலகலப்பான திரைக்கதையுடன் இயக்குவதில் வல்லவரான விக்னேஷ் சிவன், சமீபத்தில் ட்ரெண்டான படத்தை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் உடன் இணைவது இந்த அப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘Love Insurance Kompany’ படத்தில் நடிகர் எஸ் ஜெ சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ’96’ படத்தில் நடித்த கௌரி கிஷன் இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். ‘லவ் டுடே‘ படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் யோகி பாபு நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.
எதிர்காலத்தில் 2035ம் ஆண்டில் நடக்கும் கதையாக தெரிகிறது ‘Love Insurance Kompany’. போஸ்டரில் பிரதீப் ரங்கநாதன் ஒரு மொபைல் போன்ற சாதனத்தை தொடுகிறார். அதில் Love Score Processing என்று காட்டுகிறது. அதே போல் பின்னாடி இருக்கும் கட்டிடத்தில், Break Up? காப்பீடு திட்டம் எடுங்கள் என்ற வாசகமும் இருக்கிறது. ஆகாயத்தில் பறக்கும் கார்களும், ரோட்டில் ரோபோட்களும் நடந்து செல்வதும் என முதல் போஸ்டரே அசத்தலாக உள்ளது.
ஏற்கனவே ‘Love Insurance Corporation’ என்று பெயரிடப்பட்ட இந்த படம், ‘LIC’ நிறுவனத்துடன் ஏற்பட்ட குழப்பத்தால் இன்று பெயர் மாற்றப்பட்ட்து. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]