Home Cinema News ‘Love Today’ பிரபல பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் ‘Dragon’!

‘Love Today’ பிரபல பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் ‘Dragon’!

‘Love Today' பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் அப்டேட். 

by Vinodhini Kumar

‘Love Today’ பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் அப்டேட். 

பிரதீப் ரங்கநாதன் ‘Love Today’ படத்தின் வழியாக பிரபலமானவர். இயக்குனராக ஆரம்பித்து, ‘Love Today’ படத்தில் நடிகராக இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார். இவரின் அடுத்த படத்தின் அப்டேட் நேற்று வெளியாகியுள்ளது. 

PradeepRanganathan 1
Dragon Cover 1 1

 ‘Oh My Kadavule’ படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின்‌ இயக்கத்தில் ‘Dragon’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் பிரதீப் ரங்கநாதன்.  இந்த செய்தியை வீடியோ வழியாக தெரிவித்தனர். இருவரின் தனிப்பட்ட வெற்றிகளும் ஒன்றினைந்து புதிய முயற்சியாக அமைகிறது ‘Dragon’. படத்தின் டைட்டிலை வைத்து பார்க்கும் போது இதுவரை இவர்களின் காதல் – காமெடி பட பாணியில் இருந்து மாறுபட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘Oh My Kadavule’ படத்திற்கு கிடைத்த அமோக வெற்றியால் இந்த படத்திற்கும் மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றிகரமாக கமர்ஷியல் படங்களை தந்துள்ளார். இருவரின் படங்களும் காதல்-காமெடி கலந்து ரசிகர்களுக்கு ஃப்ரெஷான கதையை தந்து ஹிட்டானது. இந்த புது கூட்டணியில் உருவாகும் படமும் கமர்ஷியல் ஹிட் படமாக அமையும் என்பது கணிப்பு. 

Tamil cinema’வில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் யார் தெரியுமா?!

LIC movie 1 edited 1

பிரதீப் ரங்கநாதன் ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘LIC- Love Insurance Corporation’ என்ற படத்தில் நடித்து வருவது அறிவிக்கப்பட்டது. இதில் எஸ் ஜே சூர்யா, க்ரித்தி ஷெட்டி மற்றும் கௌரி ஜி கிஷன் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையில் ஒரு காதல் எண்டர்டெயின்மெண்ட் படமாக அமையலாம். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

Tamil cinema’வில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் யார் தெரியுமா?!

‘Dragon’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை AGS எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளது. இதற்கு முன் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘Love Today’ படமும் இதே தயாரிப்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்க உள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர் நிக்கெத் பொம்மி என்றும் எடிட்டிங் பிரதீப் இ ராகவ் என்றும் அறிவிக்கப்பட்டது. படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்க உள்ளனர் என்று விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்தனர். படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. பிரதீப் ரங்கநாதனின் வெற்றி நடை தொடருமா என்று வரவிருக்கும் இரண்டு படங்கள் மூலம் தெரியும்!

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.