‘லவ் டுடே’ படத்தை இயக்கி, அதில் ஹீரோவாக நடித்து 2K கிட்ஸிடம் அதிக லைக்ஸ் குவித்து ஃபேமஸானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது, இவர் விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் ‘LIC’ (Love Insurance Corporation) படத்தில் நடிக்கிறார்.
இதில் பிரதீப்புக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி டூயட் பாடி ஆடி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Dedicated to all those who have a dream 🙂
— Pradeep Ranganathan (@pradeeponelife) April 10, 2024
Joining hands with my brother , friend , well wisher @Dir_Ashwath and my home ground @Ags_production once again ❤️#AGS26 #PR03
Announcement video : https://t.co/JwLjs8n5HI#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh pic.twitter.com/hKxBbns9TB
இந்த படத்தை ‘ஓ மை கடவுளே’ புகழ் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளாராம். இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. இத்தகவலை பிரதீப்பே தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வீடியோ வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.
இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார், பிரதீப்.ஈ.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் ஷூட்டிங் வருகிற மே மாதத்தில் இருந்து துவங்கப்போகிறதாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]