Five Star படத்தின் மூலம் அறிமுகமான பிரசன்னா சீனா தானா 001, அஞ்சாதே, பான காத்தாடி, சென்னையில் ஒரு நாள், துப்பறிவாளன், மாஃபியா சாப்டர் 1 போன்ற படங்களில் கவனிக்கும் படியான நடிப்பை தந்தார்.
பெரிய அளவில் ஹிட் தராமல் கவனிக்கும் படியான கேரக்டரில் நடித்துவந்த பிரசன்னா தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் Good Bad Ugly படத்தில் இணைந்துள்ளார்.
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசரதவன் அடங்காதவன், பகிஹீரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் தற்போது அஜித் குமார் உடன் Good Bad Ugly என்ற படத்தை எடுத்துவருகிறார்.
Dear friends and wellwishers,
— Prasanna (@Prasanna_actor) October 3, 2024
This time It's finally true that I'm part of our beloved Thala Ajith Kumar sir's film. It's a dream come true for me. Since Mankatha, every time AK sir's films were announced, I was supposed to be a part of those. His fans kept speculating and… pic.twitter.com/S9nEjonNgc
படத்தில் அஜித்தின் கெட்டப், T ஷார்ட் என வைரலாகி வந்தது. படத்தில் திரிஷா நடிப்பது உறுதியான நிலையில் தெலுங்கு நடிகரான சுனில் நடிப்பதும் உறுதியானது. வில்லன், அஜித்தின் கெட்டப், மற்ற நடிகர்கள் குறித்து பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல இதுவரை நடந்து வந்தது. இந்த முறை குட் பேட் அக்லி மூலம் எனது விருப்பம் நிறைவேறியது. ஆதிக் ரவிசந்திரனுக்கும், அஜித்குமாருக்கும், கடவுள், மைத்ரி மூவிஸ், சுரேஷ் சந்திரா மற்றும் அஜித்குமாரின் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பிய அனைவருக்கும் நன்றி என்று கூறி பதிவிட்டிருந்தார்.
ஐதராபாத்தில் Ajith… 25 ஆண்டுகளுக்குப்பிறகு Good Bad Ugly அஜித்துடன் இணையும் நடிகர்?
மேலும் குட் பேட் அக்லி படத்தில் நான் நடிக்கவிருக்கும் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்க்கு மேல என்னால் எதுவும் கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.
தற்போது அஜித்குமார் கார் ரேஸிங் டீம் ஒன்றை துவங்கியுள்ள நிலையில் அஜித்குமார் நடிக்கும் படத்தின் அப்டேட்டும் வந்துகொண்டே உள்ளது. வரும் நாட்களில் படத்தில் நடிக்கும் வேறு சில நடிகர்கள் பற்றிய தகவல்கள் வரும் என காத்திருப்போம்
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]