Home Cinema News பிரஷாந்தின் பர்த்டே ஸ்பெஷல்… ‘The GOAT’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு!

பிரஷாந்தின் பர்த்டே ஸ்பெஷல்… ‘The GOAT’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு!

by Santhiya Lakshmi


தமிழ் சினிமாவில் 90-களில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மாஸ் காட்டியவர் ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த். இவர் ஹீரோவாக நடித்துள்ள ‘அந்தகன்’ பல மாதங்களாக கிரீன் சிக்னல் கிடைக்காமல் ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

இப்போது பிரஷாந்த், கோலிவுட்டின் டாப் ஹீரோவான ‘தளபதி’ விஜய்யின் புதிய படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ல் மிக முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு இயக்கிக் கொண்டிருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துக் கொண்டிருக்கும் இதற்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறதாம். இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 

இந்நிலையில், இன்று நடிகர் பிரஷாந்தின் பிறந்தநாள் என்பதால் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ன் புது போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.