Home Cinema News விஜய்யின் ‘The GOAT’ படத்தில் AI மூலம் விஜயகாந்த் என்ட்ரி… கன்ஃபார்ம் பண்ண அவரது மனைவி பிரேமலதா!

விஜய்யின் ‘The GOAT’ படத்தில் AI மூலம் விஜயகாந்த் என்ட்ரி… கன்ஃபார்ம் பண்ண அவரது மனைவி பிரேமலதா!

விஜய்யின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'-ல் மறைந்த நடிகர் 'புரட்சி கலைஞர்' விஜயகாந்தை AI டெக்னாலஜியை பயன்படுத்தி கெஸ்ட் ரோலில் கொண்டு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

by Sivaanantham RB

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT)-ன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கிக் கொண்டிருக்கும் இந்த படத்தை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான ‘விசில் போடு’ ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்தது. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மைக் மோகன், ஜெயராம், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, அஜ்மல், பிரேம்ஜி, லைலா, வைபவ் ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தில் மறைந்த நடிகர் ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்தை AI டெக்னாலஜியை பயன்படுத்தி கெஸ்ட் ரோலில் கொண்டு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மீடியாவுக்கு கொடுத்திருக்கும் பேட்டியில் “கேப்டனை AI மூலம் விஜய்யின் ‘The GOAT‘ படத்தில் கொண்டு வர வேண்டும் என பல முறை வெங்கட் பிரபு வந்து என்னிடம் பேசியிருக்கிறார்.

தேர்தல் முடிந்த பிறகு விஜய்யும் வந்து என்னை சந்தித்து இது தொடர்பாக பேசவிருக்கிறார். கேப்டன் இப்போது இருந்திருந்தால், விஜய்-க்காக அவர் யெஸ் தான் சொல்லியிருப்பார். அதேபோல், நானும் தேர்தலுக்கு பிறகு விஜய் மற்றும் வெங்கட் பிரபுவை சந்தித்து நல்ல முடிவை சொல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.