Home Cinema News ஒரு வழியாக திருமணம் செய்ய போகும் Premgi Amaren…

ஒரு வழியாக திருமணம் செய்ய போகும் Premgi Amaren…

Premgi-யின் திருமண அப்டேட் குறித்து அவரது அண்ணன் வெங்கட் பிரபு X வலைத்தளத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது. 

by Sudhakaran Eswaran

Premgiயின் திருமண அப்டேட் குறித்து அவரது அண்ணன் வெங்கட் பிரபு X வலைத்தளத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது. 

இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் மகன்கள் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் Premgi . படம், பாட்டு, நகைச்சுவை என குடும்பமே திரை துறை மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் மிக நீண்ட காலமாக திருமணம் செய்யாமல் இருந்து வரும் பிரேம்ஜி எங்கு சென்றாலும் எப்போது திருமணம் என பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.   

Untitled design 1

ஒரு சில கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்லும் என்பதை போல இவ்வளவு நாட்கள் பொறுமை காத்துக்கொண்டிருந்த பிரேம்ஜிக்கு தற்போது திருமணம் உறுதியாகியுள்ளது. இதனை அவரது அண்ணன் வெங்கட் பிரபு X வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், 

“இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!. 

எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. “பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?” “சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?” இதை எல்லாவற்றையும் விட, “பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?” என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்!

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன் எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்!” என்று பதிவிட்டிருந்தார். 

மேலும் GOAT படத்தின் அப்டேட் விரைவில் என்றும் பதிவிட்டிருந்தார். 

Premgi-யின் திருமண செய்தியை கேட்ட 90’s கிட்ஸ் அவரின் காமெடி டயலாக் ஆனா “என்ன கொடுமை சார் இது” டயலாக் கொண்டு மீம்கள், கமெண்ட்கள் செய்து வருகின்றனர். “எவ்வளோவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டாம” என்ற பிரேம்ஜி டயலாக் போல “எவ்வளோவோ பண்ணிட்டோம் இனி திருமணமும் செய்ய போறார் பிரேம்ஜி”. என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இதற்க்கு முன்னர் பிரேம்ஜி பெயர் போட்ட திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அதையும் குறிப்பிட்டு வெங்கட் பிரபு பதிவிட்டிருந்தார். 

ஜூன் 9-ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுஎளிமையாக திருமணம் நடைபெறுகிறது.   

வல்லவன் படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிய Premgi நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சில பாடல்கள் இசையமைத்தும் பாடியுமுள்ளார். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.