Home Cinema News அடேங்கப்பா… ஒரே வாரத்தில் பிரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ (The Goat Life) செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் பிரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ (The Goat Life) செய்த வசூல் இத்தனை கோடியா?

by Sivaanantham RB


பிரபல மலையாள எழுத்தாளர் பென்யாமின், நஜீப் முகமது என்பவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து 2008-ஆம் ஆண்டு ‘ஆடுஜீவிதம்’ என்ற நாவலை எழுதினார். அந்த நாவலை தழுவி அதே பெயரில் (‘ஆடுஜீவிதம்’ The Goat Life) எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், கடந்த மார்ச் 28-ஆம் தேதி திரையரங்குகளில் மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.

Aadujeevitham The Goat Life 4 days collection

இயக்குநர் ப்ளெஸ்ஸி இயக்கியிருக்கும் இந்த படத்தில் ‘நஜீப் முகமது’ கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருக்கிறார். இதனை ‘விஷுவல் ரொமான்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார், சுனில்.கே.எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 7 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.87 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.