Home Cinema News அடேங்கப்பா… பிரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ (The Goat Life) முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… பிரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ (The Goat Life) முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

by Sivaanantham RB

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் நேற்று (மார்ச் 28-ஆம் தேதி) திரையரங்குகளில் மலையாளம் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸான படம் ‘ஆடுஜீவிதம்’ (The Goat Life).

இந்த படத்தை பிரபல மலையாள இயக்குநர் ப்ளெஸ்ஸி இயக்கியுள்ளார். இதில் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், சுனில்.கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பிரபல மலையாள எழுத்தாளர் பென்யாமின், நஜீப் முகமது என்பவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து எழுதிய ‘ஆடுஜீவிதம்’ எனும் நாவலின் தழுவல் தான் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், உலக அளவில் இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.16.7 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரித்விராஜே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.