பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடித்து கடந்த மார்ச் 28-ஆம் தேதி திரையரங்குகளில் மலையாளம் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியான படம் ‘ஆடுஜீவிதம்’ (The Goat Life).
இந்த படத்தை பிரபல மலையாள இயக்குநர் ப்ளெஸ்ஸி இயக்க, இதில் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். தற்போது, இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
100 Cr and counting at the Global Box Office! Thank you for this unprecedented success! ❤️🙏 #Aadujeevitham #TheGoatLife @DirectorBlessy @benyamin_bh @arrahman @Amala_ams@Haitianhero @rikaby @resulp @iamkrgokul @HombaleFilms @AAFilmsIndia @PrithvirajProd @RedGiantMovies_… pic.twitter.com/6H1gynVIJ6
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) April 6, 2024
இந்நிலையில், கடந்த 9 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரித்விராஜே தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், சுனில்.கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல மலையாள எழுத்தாளர் பென்யாமின், நஜீப் முகமது என்பவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து எழுதிய ‘ஆடுஜீவிதம்’ எனும் நாவலின் தழுவல் தான் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]