Home Cinema News பாடகி P. சுசீலா மற்றும் பாடலாசிரியர் மு மேத்தாவிற்கு கலைஞர் நினைவு விருது! 

பாடகி P. சுசீலா மற்றும் பாடலாசிரியர் மு மேத்தாவிற்கு கலைஞர் நினைவு விருது! 

பாடகி P சுசீலா மற்றும் கவிஞர் மு மேத்தா இருவரையும் இன்று நேரில் சந்தித்து கலைஞர் நினனவு கலைத்துறை வித்தகர் விருதை 2023ம் ஆண்டுக்காக வழங்கினார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.

by Vinodhini Kumar

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் சினிமா துறையில் திரைக்கதை எழுத்தாளராக, பாடலாசிரியராக கோலாச்சிய மு. கருணாநிதி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரபல பின்னணி பாடகி P. சுசீலா மற்றும் பாடலாசிரியர் கவிஞர் மேத்தா ஆகியோருக்கு கலைஞர் நினைவு விருதுகள் வழங்கினார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின். 

பாடகி P சுசீலா மற்றும் கவிஞர் மு மேத்தா இருவரையும் இன்று நேரில் சந்தித்து கலைஞர் நினனவு கலைத்துறை வித்தகர் விருதை 2023ம் ஆண்டுக்காக வழங்கினார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின். இந்த விருது கலைஞர் கருணாநிதியின் நினைவாக சினிமா துறையில் சிறப்பாக செயல்படும் திறமையாளர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். இந்த விருதுடன் 10 லட்சம் ரூபாய் பணமும் விருது வெல்பவர்களுக்கு வழங்கப்படும். 

இந்த விருதை தற்போது பிரபல பாடகி P. சுசீலா தன்னுடைய குடும்பத்தினருடன் வந்து பெற்றுக்கொண்டார். இவரின் 74 ஆண்டுகள் திரைப்பயணத்தை கொண்டாடும் வகையிலும், திரைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காகவும் கலைஞர் நினைவு விருது தரப்பட்டது. 

1951ம் ஆண்டு ‘பெற்ற தாய்’ படத்தில் எதுக்கு அழைத்தாய் என்ற பாடலை பாடி தன்னுடைய தேன் குரலை முதல் முறையாக திரைப்படத்தில் ஒலிக்கவைத்தார். பிறகு 1955ல் வெளியான ‘மிஸ்ஸியம்மா’ படத்திலும் இவரின் குரல் பலரின் கவனத்தை ஈர்த்தது. 

காலம் கடந்து ரசிக்க வைக்கும் S. P. Balasubrahmanyam அவர்களின் இசை காவியங்கள்… 

பாடகி P. சுசீலா அவர்களுடைய திரை பயணத்தில்  அவரின் பெயரை பெருவாரியாக தெரியப்படுத்திய பாடல் என்றால் அது 1969ம் ஆண்டில் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் இசையில் P. சுசீலா பாடிய ‘நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா’ என்ற பாடல் தான். 

P. சுசீலா
Source: Facebook (Imprints and Images of Indian Film Music)

‘உயர்ந்த மனிதன்’ படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்காக பாடகி சுசீலாவுக்கு ‘சிறந்த பெண் பின்னணி பாடகி’ விருது வழங்கப்பட்டது. இவர் தான் தேசிய விருது பெற்ற முதல் பெண் திரை கலைஞர். இதே பாடலுக்காக தமிழ்நாடு மாநில விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உள்ள பல முன்னணி நடிகைகளுக்கு சுசீலாவின் குரல் பொருத்தமாக அமைந்ததும், முக்கியமாக நடிகை சரோஜா தேவிக்கு ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடல், நடிகை பத்மினிக்கு ‘மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன’ பாடல், கே ஆர் விஜயாவிற்கு ‘உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல’ என இவரின் காந்த குரல் இன்றும் நம்மை மயக்கி வருகிறது. 

‘மாலை பொழுதின் மயக்கத்திலே’ பாடல் தொடக்கம் முதல் கேட்பவர்களை கட்டி போட்டு ஈர்க்கும். காதல் ரசம் மட்டுமில்லாமல் தெய்விகமான பாடல்களையும் இவரின் குரலால் மேம்படுத்தும் திறமை பெற்றவர் P. சுசீலா. ‘சொல்ல சொல்ல இனிக்குதடா’ என இவரின் குரலில் பக்தி மிகுதியாக இருக்கும். 

‘Love Birds’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ என சுசீலாவின் குரல் திசையெங்கும் ஒழிக்க தொடங்கி அயராமல் நவரசத்தையும் அவரின் குரல்வளையில் எளிதில் பாடி இன்றும் ‘Melody Queen’ என்ற பட்டத்துக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். என்னதான் இவரின் தஹ்ய மொழி தெலுங்கு என்றாலும் இவர் பாடிய அணைத்து மொழி பாடல்களிலும் அவரின் உச்சரிப்புக்காக பெயர் போனவை. இவருக்கு இப்படியொரு கவுரவம் கிடைத்தது அவரின் ரசிகர்களுக்கு ஆனந்தமாக அமைந்துள்ளது. 

அதே போல் பாடலாசிரியர் கவிஞர் முகம்மது மேத்தா அவர்களுக்கும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டுள்ளது. புதுக்கவிதை வழியாக 1970கள் முதல் கவிதைகள், புதினங்கள் எழுத தொடங்கியவர், பேராசிரியராக பணியாற்றி கொண்டே திரைத்துறையில் பாடலாசிரியராக பணியாற்ற தொடங்கினார். 

1981ம் ஆண்டு இசையமைப்பாளர் ஷங்கர்- கணேஷ் இசையில் இவர் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பின் இசைஞானி இளையராஜா உடன் இணைந்து பல வெற்றி பாடல்களை இயற்றினார். ‘போன் மானே சங்கீதம் பாட வா’ பாடல் இவருக்கு நல்ல வரவேற்பை தேடி தந்தது. 

Muhammed Metha
Source: Vikatan

1985ல் ‘உதய கீதம்’ படத்தில் இடம் பெட்ரா ‘பாடு நிலாவே’ பாடல் கவிஞர் மு. மேத்தாவின் வசீகர வரிகள் தான். இன்றளவும் இணையதளங்களில் அயராமல் ஒலிக்கும் ‘ராஜ ராஜ சோழன் நான்’ பாடலை காதல் நயத்தோடு எழுதியவர், இசையமைப்பாளர் சந்திரபோஸ், தேவா, ஆகியோருடன் தொடர்ந்து பணியாற்றினார். 

சூரியவம்சம் படத்தில் வரும் ‘நட்சத்திர ஜன்னலில்’ பாடல், 2000ம் ஆண்டு ‘மயில் போல பொண்ணு ஒன்னு’, 2001ல் காசி படத்தில் ‘என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே’ என இவரின் வரிகளில் கடத்த முடியாத உணர்வுகளே இல்லை எனலாம். இவரின் திரை பயணத்தையும் பாராட்டும் வகையில் இந்த கலைஞர் நினைவு விருது வழங்கப்பட்டு உள்ளது.          

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.