Pushpa 2 படத்தின் இரண்டாவது பாடலின் லிரிக்ஸ் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியானது.
தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஹிட் அடித்து பான் இந்தியா படமாக கலக்கியது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆனது. புஷ்பா படத்தில் “சாமி சாமி” பாடல் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2-வது பாகம் எடுக்கும் பணியில் இறங்கினார் இயக்குனர் சுகுமார். அந்த வகையில் புஷ்பா 2-வது பாகம் வரும் ஆகஸ்ட் மதம் 15-ல் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. புஷ்பா 2- தி ரூல்’ என்ற இரண்டாவது பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ரஷ்மிகா மந்தானா, தனஞ்ஜெயா, ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா பரத்வாஜ், அஜய் கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நவீன் யெர்னேனி, ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
2-வது பாகத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான “புஷ்பா புஷ்பா” ஆகியவை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாடல் யூ டியூப்பில் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்து கலக்கியது. மேலும் நேற்று இரண்டாவது பாடலான “சூடான பாடலின் மேக்கிங் வீடியோ உடன் பாடலின் லிரிக்ஸ் வெளியிட்டுள்ளது படக்குழு. இதுவும் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் ரஷ்மிகா படுவது போலும் ,அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடனமாடுவது போலும் மேக்கிங் வீடியோ இருந்தது. பாடலாசிரியர் விவேகா வரியில் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.
“அட ஊரெல்லாம் இவ முரட்டுக்காள.. என் முன்னால ஒரு பச்ச பாலகன போல” என பாடலின் முதல் வரி தொடங்குகிறது. இது இருவருக்கும் இடையேயான காதல் பாடலாக இருக்கும் என தெரிகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]