கடந்த சில வாரங்களாக இந்திய சினிமாவின் சர்ச்சையாக பேசப்படும் செய்தி தான் ‘Hema Committee Report’. மலையாள திரைத்துறையில் பிரபலமாக இருக்கும் சில நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது இளம் நடிகைகளும் , முந்தைய நடிகைகளும் பாலியல் குற்றச்சாட்டுகள் அளித்தனர்.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். மலையாளத்தில் நடந்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். “நாங்கள் நடித்தபோது, நடிகைகளின் caravan -ல் கேமேரா வைத்து அதை பல ஆண்கள் சேர்த்து பார்ப்பார்கள்” என பேட்டியளித்தார்.
மலையாள நடிகர்களில் சில முன்னணி நடிகர்கள் இந்த ‘Hema Committee Report’ பற்றி பேசியுள்ளனர். “தமிழில் இப்படி முன்னணி நடிகர்கள் வெளிவந்து இதை பற்றி பேசவேண்டும்” என்றும், பெண் நடிகர்களுக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கவேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
Hema Committee Report பற்றி நடிகை ராதிகா
நேற்று நடிகை ராதிகா பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது, இந்த மலையாள சினிமா பாலியல் குற்றச்சாட்டுக்களை பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். “என்னை கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் தொலைபேசியில் தொடர்புகொண்டனர். அவர்களிடம் இந்த சர்ச்சையை பற்றி ஆய்வு செய்வதற்காக என்னுடைய நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தேன்” என கூறினார்.
மேலும் பாலியல் குற்றச்சாட்டுக்களை ஆய்வு செய்யும் கேரள அரசிடம் நடிகை ராதிகா சரத்குமார் எந்தவித புகாரும் கொடுக்கவில்லை எனவும், அவர் ஏற்கனவே கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கவே அவர்கள் ஹோடர்புகொண்டதாகவும் அவர் கூறினார்.
ரஜினிகாந்த் பற்றி ராதிகா சரத்குமார்
பல பிரபல நடிகர்களிடம் நடந்துவரும் பாலியல் சர்ச்சைகள் பற்றி பத்திரிக்கையாளர் கேள்விகள் கேட்டு வருகிறார்கள். அப்படி நடிகர் ரஜினிகாந்திடம் ஹேமா கமிட்டி ரிப்போர்ட் பற்றி கேட்டபோது “எனக்கு அதை பற்றி தெரியாது” என கூறினார். இதை பற்றி ராதிகாவிடம் கருத்து கேட்டபோது, அவருக்கு நிஜமாகவே தெரியாமல் இருக்கலாம் என பதிலளித்தார்.

ஆனால் முன்னணி நடிகர்கள் பலரும் மௌனம் சாதிப்பது தவறு என சுட்டிக்காட்டியுள்ளார். அணைத்து முன்னணி நடிகர்களும் வெளிப்படையாக பேசாமல் இருப்பதை பற்றி கூறிய ராதிகா, தனது கணவர் சரத்குமாரிடம் இதை பற்றி வெளிப்படையாக பேச சொல்லியதாகவும் பெட்டியில் கூறினார்.
பழைய சர்ச்சைகள் பற்றி பேசிய ராதிகா
பாடகி சின்மயி 2018ம் ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றம் சாட்டினார். #Me Too என்ற இயக்கத்தின் தொடர்ச்சியாக இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். இருப்பினும் இந்த பாலியல் சீண்டல் பற்றியோ, அதற்காக கவிஞர் வைரமுத்து மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சர்ச்சையை சுட்டிக்காட்டிய நடிகை ராதிகா சரத்குமார், “பாடகி சின்மயி வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்தபோது அவருக்கு யாரும் ஒத்துழைக்காமல் இருந்தது ஏன்?” என கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ‘உள்ளொழுக்கு’ படத்தில் அசத்தலாக நடித்த நடிகை பார்வதி பற்றி பேசினார்.

“சமீபத்தில் வெளியான ‘உள்ளொழுக்கு’ படத்தை பார்த்தேன். அதில் பார்வதி சிறப்பாக நடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு எந்தவித விருதுகளும் வழங்காதது ஏன்?” என தனது கேள்வியை முன்வைத்தார். நடிகை பார்வதி மலையாள சினிமா துறையில் உள்ள பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக பல ஆண்டுகளாக குரல்கொடுத்து வருகிறார். அதனால் தான் மலையாள திரைத்துறையில் அவரை ஒதுக்கிவைக்கிறார்கள் என்பதும் பலரின் கருத்து.
தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு
தென்னிந்திய கலைஞர்கள் சங்கம் அல்லது, தமிழ்நாட்டில் உள்ள திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் மேடை நடிகர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் ஆகும். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தற்சமயம் சர்ச்சையாக பேசப்படும் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக முடிவு எடுத்துள்ளனர்.
செப்டம்பர் 4 ம் தேதி இந்த முடிவெடுக்கெடுக்கப்பட்டது. Gender Sensitisation and Internal Complaints Committee (GSICC) சார்பில் தமிழ் திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு அனைத்து சட்ட உதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]