இரண்டு நாட்களுக்கு முன், Lady Superstar நயன்தாரா நடிகர் தனுஷை கண்டித்து வெளியிட்ட கடிதத்திற்கு பல கதாநாயகிகள் அவர்களின் ஆதரவை தெரிவித்தனர். தென் இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்து வரும் நடிகையும், கோலிவுடின் Lady Superstar என்று அழைக்கப்படும் நயன்தாரா இன்று அவரது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவரின் ரசிகர் மற்றும் ரசிகர்களுக்கு தனது பிறந்த நாள் உபசரிப்பாக, அவரின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் title teaser வெளியாகும் என்ற போஸ்டர் நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அதில் கையில் ஈட்டியுடன் நிற்கும் நயன்தாரா அதோடு “She Declares War” (அவள் போரை அறிவிக்கிறாள்) என்று குறிப்பிடப்பட்ட வாக்கியம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தை தூண்டியது. மேலும் இது நடிகர் தனுஷை சாடுவது போன்று இருப்பதாக சிலரும் கூறினர்.
வருகிறாள்… “ராக்காயி”!!!
பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு “ராக்காயி” திரைப்படத்தின் title teaser படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.
குழந்தையின் அழுகுரலுடன் துவங்குகிறது teaser, இருளும் இடியும் சேர்ந்து போருக்கான முழக்கம் போல் காட்சியளிக்கிறது. தீப்பந்தங்களை ஏந்தி நூற்றுக்கணக்கான ஆண்கள் கிராம பின்னணியில் தன்னதியாக உள்ள ஒரு வீட்டை நோக்கி வருகின்றனர். மறுபுறம் சினம் கொண்ட பெண் சிங்கம் போல் காட்சியளிக்கும் Lady Superstar உலக்கையில் காய்ந்த மிளகாயை இடிப்பது அந்த காட்சியின் காரசாரத்தை மேலும் கூட்டுகிறது என்றே கூறலாம். குழந்தையை உறங்க வைத்து தொட்டிலில் இட்டு பின் அவர்களை நோக்கி வரும் ஆபத்தை எதிர்நோக்க கிளம்புகிறாள் “ராக்காயி”.
வலது கையில் ஈட்டியும் இடது கையில் அரிவாளுடன் தன் முன்னே இருக்கும் எதிரிகளை வெட்டி சாய்க்கிறார். ரத்தம், குரோதம், தாய்மை, வீரம், தைரியம் என பல விதமான உணர்ச்சிகள் இந்த ஒரு teaser வெளிப்படுத்துகிறது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையில் ஒலிக்கும் “விழிகளில் தீயாய் வாளேந்தி, மனதினில் தாயாய் போராடி….” இந்த பாடல் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. இறுதியில் தோன்றுகிறது படத்தின் தலைப்பு ‘ராக்காயி’.
இதில், இந்த திரைப்படத்தின் வெளியிட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“ராக்காயி” படக்குழு
- இயக்குனர் – செந்தில் நல்லசுவாமி
- நடிகர்கள் – Lady Superstar நயன்தாரா, B.S.அவினாஷ்
- இசை – கோவிந்த வசந்தா
- தயாரிப்பு – Drumsticks Productions, Movieverse Studios
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]