தனுஷ் நடிக்கும் ஜம்பதாவது படமான ‘ராயன்’ படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகியுள்ளது. சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, சரவணா நடித்துள்ளனர்.
ஒரு குடும்பத்தில் அண்ணன் தனுஷ், தம்பிகள் சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம். அவர்களின் சகோதரி துஷாரா விஜயன். இவர்களின் தந்தை அல்லது ஆசான் மாதிரியான தோற்றத்தில் வருகிறார் செல்வராகவன். தனுஷின் குடும்பத்தை கொலை செய்யும் கும்பலை தேடி சென்று கொலை செய்யுகிறார். அதற்காக அவர் சந்திக்க ஊம் நபர்கள் மற்றும் சூழ்நிலைகள் தான் கதை. Blood is thicker than Everything என்ற sublineக்கு ஏற்றமாதிரி கதையும் அமையும்.
காட்டிலேயே மிக வலிமையான மிருகம் சிங்கம் தான். ஆனால் மிக புத்திசாலியான மிருகம் ஓநாய் என செல்வராகவன் பேச, அவரின் பின்னணி குரலில் டிரெய்லரில் காட்சிகள் மாறுகிறது. படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லத்தனமாக தெரிகிறார், அவரை சிங்கம் என குறிப்பிட்டு கூறி, வலிமையான மிருகத்தையும் வெல்ல மீதியுள்ள மிருகங்கள் சேர்ந்தால் முடியும் என்ற கணக்கில் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் கதையை தனுஷ் பல ஆண்டுகளாக மனதில் வைத்திருந்ததாகவும், இந்த படத்தை இயக்க ஆர்வமுடன் அவர் இருந்ததாகவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டது.

தனுஷின் 50வது பாடமாக அமைந்துள்ள ‘ராயன்’, ஏ ஆர் ரஹ்மான் இசையில் டிரெய்லர் மிரட்டலாக உள்ளது. அதுவும் டிரெய்லரின் முடிவில் ‘உசுரே நீ தானே’ பாடல் வரிகள் வந்தது தனுஷ் ரசிகர்களுக்கு பூரிப்பாக இருந்தது.
இயக்குனராக தனுஷ் ‘ராயன்’ படத்தில் விதவிதமான ஃபில்டர் கலர்களை பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். டிரெய்லரில் வரும் ஃப்ரேம்களும் அருமையாக அமைந்துள்ளது படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘ராயன்’ படம் வரும் ஜூலை 26ம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]