நடிகர் தனுஷ் ‘ப. பாண்டி’ படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். தன்னுடைய 50வது படமான ‘Raayan’ படத்தை நடித்து இயக்குகிறார். இதன் ரிலீஸ் தேதியின் அறிவிப்பு வந்துள்ளது. நடிகர் தனுஷ் இயக்கி, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடித்துள்ள படம் ராயன். தனுஷின் 50வது படமாக அமைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவாக போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்துவருதை கடைசி அப்டேட்டில் தெரிவித்தார் தனுஷ்.

ஏ. ஆர். ரஹ்மானின் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. ஆக்ஷன் கலந்த Revenge கதையாக எடுக்கப்பட்ட ‘ராயன்’ படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 26 என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ். ‘X’ தளத்தில் ஒரு புது போஸ்டரை வெளியிட்ட இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்.
#Raayan From July 26th pic.twitter.com/2UaNocSTm3
— Dhanush (@dhanushkraja) June 10, 2024
ஜூலை 28 நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ராயன்’ படம் வெளியானதும் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. புதிய போஸ்டரில் பெரிய காளி வரைப் படத்துக்கு முன் தனுஷ் நிற்பது படம் மாஸ் கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருதி படுத்தியுள்ளது.

2024ல் தனுஷின் ‘ராயன்’, ‘குபேரா’ படங்கள் வர உள்ளது. தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஒரு வழக்கமான காதல் கதை எனத் தெரிகிறது. வண்டர்பார் ஃபில்ம்ஸ் மற்றும் கஸ்தூரி ராஜா இணைந்து தயாரித்து, ஜி வி பிரகாஷ் இசையில் உருவாக உள்ளது. இது மட்டுமில்லாமல் இளையராஜாவின் வாழ்க்கை படத்தில் கமிட்டாகி உள்ளார். ஆக மொத்தம் 2024ல் படு பிசியாக உள்ளார் நடிகர் தனுஷ். அடுத்தடுத்து திரையில் தனுஷை பார்க்க அவரின் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]