கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் – இயக்குநர் வெங்கட் பிரபு காம்போவில் ரெடியாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ன் ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்து கொண்டிருக்கிறது.
நேற்று முன் தினம் தான், இப்படத்தை வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம் என விஜய்யே தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முடித்தவுடன் ‘சதுரங்க வேட்டை’ இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோர்க்கவுள்ளார் விஜய்.
Hi everyone, I visited Nanban Vijay’s Sai Baba Temple today along with his mother. When I built My Raghavendra Swamy temple, She sang a song in our temple and graced us with her presence. Today, I’m happy to visit their temple with her. My heartfelt wishes to Nanban Vijay… pic.twitter.com/sZvzFqC0LL
— Raghava Lawrence (@offl_Lawrence) April 13, 2024
இந்த ஆண்டு (2024) பிப்ரவரி 11-ஆம் தேதி ‘தளபதி’ விஜய் தனது அம்மா ஷோபாவுக்காக சென்னை கொரட்டூரில் கட்டிய சாய் பாபா கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு விஜய் 2 தடவை அங்கு சென்று சாமி தரிசனம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இன்று பிரபல நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இந்த சாய் பாபா கோவிலுக்கு விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகருடன் சென்று சாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை லாரன்ஸே தனது எக்ஸ் பக்கத்தில் அங்கு எடுத்த வீடியோவை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]