மாநகரம் படத்தின் மூலம் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட லோகேஷ் கனகராஜ், தற்போது தனக்கென்று ஒரு தனி உலகை உருவாக்கி தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
இந்த யூனிவெர்ஸ் கைதி படத்தில் முதன் முதலில் தொடங்கியது. முக்கிய கேரக்டரில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் நடித்திருந்தனர். போலீஸ் அதிகாரியான நரேனுக்கு போதை பொருட்களை மீட்க கார்த்தி உதவி செய்வார்.
அதனை தொடர்ந்து விக்ரம் படத்தில் அந்த போதை பொருள் கும்பலை கண்டுபிடித்து கமல் அழித்தார். போதை பொருள் கும்பல் மூலம் கொல்லப்பட்ட தனது மகன் காளிதாஸ் ஜெயராமுக்காக இதனை கமல் செய்தார்.
#ACTION from the sets of VIKRAM#Vikram_release_onsummer2022 #Vikram #KamalHaasan @ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil pic.twitter.com/9cWlmshrbb
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 22, 2021
போதை பொருள் கும்பலால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியான பகத் பாசில், தனது மகனுக்காக போதை பொருள் இல்ல சமூகம் வேண்டும் என நினைக்கும் கமல், போதை பொருள்களை மீட்க உதவிய கார்த்தி என மூவரும் ஒரு பக்கம் சேரும்படியாக கதை அமைந்தது.
தமிழ் சினிமா எனும் யூனிவர்ஸில் Lokesh Kanagaraj-ன் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU)
போதை பொருட்கள் தயாரிக்கும் விஜய் சேதுபதி, அதனை சந்தை படுத்தும் நபராக அர்ஜுன் தாஸ், அவருக்கு மேல் இருந்து ஆர்டர் தரும் நபராக ரோல்ஸ் கேரக்டரில் சூர்யா என இவர்கள் ஒருபக்கம்.
அடுத்து லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், விஜய் ஆகியோர் போதை பொருட்களை சந்தை படுத்திவந்தனர். சஞ்சய் தத் உடனான கருத்து வேறுபாட்டால் அந்த கும்பலை விஜய் அழித்து போதை பொருட்களுக்கு எதிராக திரும்பினார்.
இறுதியாக கமலிடம் போதை பொருட்கள் இல்லாத உலகை அமைப்போம் என விஜய்க்கு அழைப்பு வந்தது. இவ்வாறு போதை பொருள் கும்பல் மற்றும் அதற்கு எதிராக இருக்கும் சிலர் என LCU கதையை கொண்டு செல்கிறார் லோகேஷ் கனகராஜ்.
கமல், சூர்யா, விஜய், கார்த்தி, விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ் என சூப்பர் ஸ்டார் ஹீரோக்கள் ஒரு மையப்புள்ளிக்கு கொண்டு வரும் படியான கதையை உருவாக்கவுள்ளார் லோகேஷ். இந்த நிலையில் அடுத்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக்கவுள்ள Benz திரைப்படம் LCU உலகில் இணையப்போவதை உறுதி படுத்தினார்.
A warrior with a cause is the most dangerous soldier 🔥
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 29, 2024
Welcome to the universe @offl_Lawrence master 💥💥
Wishing you a very Happy Birthday 🤗❤️#BENZ 🔥@GSquadOffl @PassionStudios_ @TheRoute @bakkiyaraj_k @Jagadishbliss @Sudhans2017 @gouthamgdop @philoedit @PradeepBoopath2… pic.twitter.com/51Xuktst6x
ராகவா லாரன்ஸ் நடிப்புக்கும் Benz படத்தை G Squad நிறுவனம் தயாரிக்கவுள்ளது. லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக Benz படம் LCU – வில் இணைவதை உறுதிப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார் லோகேஷ்.
லோகேஷ் மறுபடியும் ஆரம்பிக்கலாமா என்ற டயலாக் மூலம் வீடியோ வெளியானது. ஏற்கனவே கமல், விஜய், சூர்யா, கார்த்தி என நட்சத்திர பட்டாளமே இந்த யூனிவெர்சில் இருந்துவரும் நிலையில் லாரன்ஸ் LCU – வில் இணைந்தது யாருமே எதிர்பார்க்காத ஒன்று.