Home Cinema News கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ trailer வெளியானது! 

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ trailer வெளியானது! 

புது இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் 'ராகு தாத்தா'. முழுநீள காமெடிய படமாக உருவான படத்தின் trailer வெளியாகியுள்ளது.

by Vinodhini Kumar

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரகு தாத்தா’. புது இயக்குனர் சுமார் குமார் தன்னுடைய முதல் படத்தை ஒரு முழுநீள நகைச்சுவை கதையாக இயக்கியுள்ளார். வள்ளுவன்பேட்டை என்ற ஊரில் வளரும் கயல்விழி, பிற மொழி கலப்புக்கு எதிராக போராடும் பெண்ணாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது இந்த படத்தின் trailer வெளியாகியுள்ளது. பெண்ணியம், இந்தி திணிப்பு பற்றி பேசும் ஒரு நகைச்சவையான ட்ரைலரை வெளியிட்டுள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்களான Hombale Films. 

  

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல பாராட்டுக்களை குவித்தது. அதிலும் முக்கியமாக நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகிறார்கள். சமீபத்தில் ‘ரகு தாத்தா‘ படத்தின் ‘Ek Gaon Mein’ என்ற கானா பாடல் வெளியாகியது. அதற்கு முன் ஜூலை 21, ‘அருகே வா’ என்ற பாடலை இசைமைப்பாளர் ஷான் ரோல்டன் குரலில் வெளியிடடனர். 

ரகு தாத்தா poster

கீர்த்தி சுரேஷுடன் நடிகர்கள் எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் நடந்த ‘ரகு தாத்தா’ படத்தின் promotional event சென்னையில் நடந்தது. அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசும்போது, இந்த படத்தில் நடிக்க முதலில் தயங்கியதாகவும், பின்னர் அந்த கதாபாத்திரமாக நடிக்க எளிதாக இருந்ததாகவும் குளறினார். மேலும் ‘ரகு தாத்தா’ படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி படம் என்றும் இதில்  கருத்துக்கள் இருந்தாலும் அது சீரியசான படம் இல்லை எனவும் கூறினார். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.