சூப்பர் ஸ்டார் ரஜினி திரையில் தோன்றினாலே ஸ்டைல், மாஸ், தெறிக்கவிடும் வசனம் என்று அவரின் ரசிகர்களுக்கு நினைவில் தோன்றும். அவர் நடிக்க தொடங்கியதில் இருந்து சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டர் ஆகவே இருந்து வருகிறார். துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி பிறகு வில்லனாக நடித்த பிறகு தான் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் உருவெடுத்தார். பொதுவாக எடுத்த முதல் படத்திலேயே கதாநாயகனாக காலம் இறங்கும் பலரில் இவரின் முரண்பாடான பயணம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது என்றே கூறலாம்.
பொதுவாக பெரிய நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது அரிதினும் அரிதான விஷயமாக இருந்த தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரும், உலகநாயகனும் இணைந்து நடித்து அந்த பிம்பத்தை உடைத்தனர். அதே போல் தென்னிந்திய சினிமாவும், வட இந்திய சினிமாவும் இணைந்து பணியாற்றுவது கானல் நீர் போல் 80-களில் கருதப்பட்டது. அதையும் உடைக்கும் விதமாக உருவான நட்பு தான் 1983-ல் “அந்தா கானூன்” என்ற திரைப்படத்தில் ஒன்றாக இணைந்தது. இது தான் நடிகர் ரஜினியின் முதல் பாலிவுட் படமாகும். தமிழில் 1981-ல் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில், இயக்குனர் S.A.சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் உருவான “சட்டம் ஒரு இருட்டறை” திரைப்படத்தின் ரீமேக் தான் ஹிந்தியில் “அந்தா கானூன்” என்று வெளியானது. இதில் கதாநாயகனாக நடிகர் ரஜினி, ‘விஜய் குமார் சிங்’ கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் அமிதாப் பச்சன் ‘ஜான் நிசார் கான்’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனது முதல் படத்திலேயே விமர்சக ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றார் நடிகர் ரஜினிகாந்த். இந்த படத்தை T.ராமா ராவ் இயக்கினார். 1983-ல் பாலிவுட் சினிமாவில் அதிக வசூல் செய்த 5வது படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

அதன் பிறகு, “கிராப்தார்” (Geraftaar) என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் ஆன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றினார்.
1985-ல் இந்த திரைப்படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் சக்க போடு போட்டது. இந்திய சினிமாவில் இதுவரை இப்படி ஒரு கூட்டணி அதற்கு முன் அமைந்தது இல்லை என்று கூறப்படுகிறது. ப்ரயாக் ராஜ் அவர்களின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அமிதாப் பச்சன், உலகநாயகன் கமல்ஹாசன், நடிகை மாதவி, பூனம் டிலன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். அந்த காலகட்டத்தில் அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்று. அன்று முன்னணி இசையமைப்பாளராக இருந்த பப்பி லஹிரியின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அமிதாப் பச்சனின் வெற்றிக் கூட்டணி கடைசியாக 1991-ல் வெளியான “ஹம்” (Hum) என்ற action, crime திரைப்படத்தில் சேர்ந்து நடித்தனர். இந்த திரைப்படம் தான் தமிழில் Cult gangster படமாக கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 1995-ல் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் வெளியான “பாட்ஷா” படத்திற்கான inspiration என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர் இந்த நட்பின் வெற்றிக் கூட்டணி வேறு எந்த படத்திலும் இணையவில்லை என்றாலும் பல விழாக்களில், மற்றும் அவரவர் திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்து பேசி கொண்டனர். தற்போது 33 ஆண்டுகள் கழித்து TJ ஞானவேல் அவர்களின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் “வேட்டையன்” திரைப்படத்தில் 41 ஆண்டு கால நண்பரும், பாலிவுட் சூப்பர் ஸ்டாரும் ஆன அமிதாப்பச்சனுடன் இணைந்து வெள்ளித்திரையில் தோன்ற உள்ளார். இதை குறித்து சமூக வலைத்தளத்திலும் இருவரும் பகிர்ந்தனர்.
அவர்களை போலவே ரசிகர்களும் ஆவலுடன் “வேட்டையன்” திரைப்படத்தின் ரிலீஸுக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.
After 33 years, I am working again with my mentor, the phenomenon, Shri Amitabh Bachchan in the upcoming Lyca’s "Thalaivar 170" directed by T.J Gnanavel. My heart is thumping with joy!@SrBachchan @LycaProductions @tjgnan#Thalaivar170 pic.twitter.com/RwzI7NXK4y
— Rajinikanth (@rajinikanth) October 25, 2023
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]