Home Cinema News Super Star Rajinikanthன் ‘வேட்டையன்’- படப்பிடிப்பை முடித்தார் Amitabh Bachchan! 

Super Star Rajinikanthன் ‘வேட்டையன்’- படப்பிடிப்பை முடித்தார் Amitabh Bachchan! 

Rajinikanthன் வேட்டையன் படத்தில் தனது பங்கு படப்பிடிப்பை நடித்து முடித்தார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் Amitabh Bachchan.

by Vinodhini Kumar

Rajinikanthன் வேட்டையன் படத்தில் தனது பங்கு படப்பிடிப்பை நடித்து முடித்தார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் Amitabh Bachchan.

சூப்பர் ஸ்டார் Rajinikanth நடிக்கும் வேட்டையன் படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் Amitabh Bachchan நடித்துள்ளார். மும்பையில் படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டு அதில் Rajinikanth மற்றும் Amitabh Bachchan இணைந்து நடித்துள்ளனர். தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடைசியாக 1991ல் வெளிவந்த ‘Hum’ படத்தில் நடித்திருந்தனர். 34 வருடங்களுக்கு பின் வேட்டையன் படத்தில் இணைந்துள்ளார்கள்.

Vettaiyan poster

மும்பையில் படப்பிடிப்பை முடித்து Amitabh Bachchan மற்றும் ரஜினிகாந்த் சேர்ந்து எடுத்துக்கொண்ட​ புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது இதை Amitabh Bachchan தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறாமல் கோட் சூட் போட்டு இன்றும் இளமையாக​ இருக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்.

Tamil cinema’வில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் யார் தெரியுமா?!

Amitabh Bachchan and Rajinikanth

வேட்டையன் படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலர் நடித்துள்ளார்கள். இந்தியா முழுவதிலும் படப்பிடிப்பு வேலைகள் விமர்சையாக நடந்து வருகிறது. மும்பை, திருநெல்வேலி, திருவனந்தபுரம், தூத்துக்குடி என பல இடங்களில் காட்சி படுத்தப்படுகிறது ‘வேட்டையன்’. 

அசோக் செல்வனின் ‘கூட்டத்தில் ஒருத்தன்’, சூர்யாவின் ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களை இயக்கியவர் த.செ.ஞானவேல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170வது படமான ‘வேட்டையன்’-ஐ இயக்கியுள்ளார் அக்டோபர் 2024ல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

சமீபத்தில் மும்பையில் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பி உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பிரபலங்கள் மத்தியில் ஏர்போர்ட் லுக் டிரண்டாகி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் எப்போது போல் கேசுவல் லுக்கில் அசத்தியுள்ளார். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.