Home Cinema News பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி – கமல்!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி – கமல்!

இன்று (ஏப்ரல் 15-ஆம் தேதி) இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தருண் கார்த்திகேயன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

by Santhiya Lakshmi

கோலிவுட்டின் டாப் இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் ஷங்கர் தற்போது, ‘உலக நாயகன்’ கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2‘ மற்றும் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என இரண்டு படங்களை பரபரப்பாக இயக்கி கொண்டிருக்கிறார்.

இதில் ‘இந்தியன் 2’ வருகிற ஜூன் மாதத்திலும், ‘கேம் சேஞ்சர்’ இந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதத்திலும் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 15-ஆம் தேதி) இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தருண் கார்த்திகேயன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

GLMZbMuW4AAuifj

இவர்களின் திருமணத்தில் நடிகர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன், ‘சீயான்’ விக்ரம், சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் மணிரத்னம், விக்னேஷ் சிவன், நடிகைகள் நயன்தாரா, சுஹாசினி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2021-ல் ஐஸ்வர்யா, புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் தாமோதரனை திருமணம் செய்து கொண்டதும், அதன் பிறகு அவரை விவாகரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.