Home Cinema News ‘தலைவர் 171’ படத்துக்கு அந்த சர்ச்சைக்குரிய டைட்டிலை வைக்கப்போகிறாரா ரஜினி?

‘தலைவர் 171’ படத்துக்கு அந்த சர்ச்சைக்குரிய டைட்டிலை வைக்கப்போகிறாரா ரஜினி?

by Sivaanantham RB

கோலிவுட்டின் டாப் ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ன் கைவசம் ‘வேட்டையன்’ மற்றும் ‘தலைவர் 171’ என இரண்டு படங்கள் மட்டுமே இருக்கிறது. இதில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து துவங்கவிருக்கிறது. இதனை கலாநிதி மாறனின் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் முதல் படமான இதற்கு அனிருத் இசையமைக்கப்போகிறாராம். சமீபத்தில், இந்த படத்தின் டைட்டில் டீசரை வருகிற ஏப்ரல் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததுடன், ரஜினியின் செம ஸ்டைலான போஸ்டரையும் வெளியிட்டிருந்தது ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம்.

இந்த போஸ்டர் வெளியான நாளில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. தற்போது, இந்த படத்துக்கு ‘Eagle’ என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே, ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா – கழுகு கதை மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.