Home Cinema News ‘தலைவர் 171’ன் டைட்டில் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… வைரலாகும் ரஜினியின் ஸ்டைலிஷ்போஸ்டர்!

‘தலைவர் 171’ன் டைட்டில் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… வைரலாகும் ரஜினியின் ஸ்டைலிஷ்போஸ்டர்!

by John Kamalesh

கோலிவுட்டின் டாப் ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்‘ ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்‘ படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியிருந்தார். 

‘லால் சலாம்’-க்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்‘ன் கைவசம் ‘வேட்டையன்’ மற்றும் ‘தலைவர் 171’ என இரண்டு படங்கள் மட்டுமே இருக்கிறது. இதில் ‘ஜெய் பீம்’ புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. 

GJ20QejaAAAFEX8

‘தலைவர் 171’ படத்தை கலாநிதி மாறனின் ‘சன் பிக்சர்ஸ்‘ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்துக்கு 2K கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கிறார்.

இது ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதால், இதன் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ஆடியன்ஸின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து துவங்கவிருக்கிறது.

தற்போது, இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசரை வருகிற ஏப்ரல் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே எக்ஸ் தளத்தில் ரஜினியின் செம ஸ்டைலான போஸ்டரை ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.