‘லால் சலாம்’ படத்துக்கு பிறகு கோலிவுட்டின் டாப் ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘வேட்டையன்’ மற்றும் ‘தலைவர் 171’ என 2 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இதில் ‘ஜெய் பீம்’ புகழ் த.செ.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு ‘Eagle’ என டைட்டில் வைத்துள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசருக்கான ஷூட்டிங் அடுத்த வாரம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The much awaited #Thalaivar171 update is here!
— Sun Pictures (@sunpictures) March 28, 2024
Title revealing teaser from April 22nd 💥 @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv pic.twitter.com/vpquKyetp8
இந்த டைட்டில் டீசரை வருகிற ஏப்ரல் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை கலாநிதி மாறனின் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, இதற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கப்போகிறாராம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ நடிக்கப்போகும் முதல் படம் இது என்பதால், இதன் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் எகிறி விட்டது. மிக விரைவில் இதில் ரஜினியுடன் இணைந்து நடிக்கப்போகும் மற்ற நடிகர்களின் பட்டியல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]