பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் நபர்களை கௌரவிக்க UAE அரசால் GOLDEN VISA வழங்கப்பட்டு வருகிறது. தற்போது RAJINI KANTH அவர்களுக்கு கிடைத்துள்ளது.
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் RAJINIKANTH ஜெயிலர், லால் சலாம் போன்ற படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில் வேட்டையன், கூலி என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் அண்மையில் அபுதாபி சென்ற ரஜினிகாந்த் தனது நண்பரான லுலு குழுமத்தின் தலைவர் யூசுஃப் அலியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விதமாக UAE அரசால் GOLDEN VISA வழங்கி வருகிறது. இதில் தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியல் துறை, திரைத் துறை, விளையாட்டுத் துறை உள்ளிட்ட பல துறைகளில் சாதித்தவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த visa பெறுபவர்கள் 10 வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாகக் கருதப்படுவார்கள். இந்த visa பெறுபவர்கள் அந்த நாட்டில் 13 வகையான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் அவர்களுக்கு அபுதாபியில், UAE அரசு சார்பில் GOLDEN VISA தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாவை அந்நாட்டின் காலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது கலீஃபா அல் முபாரக் வழங்கினார். அப்போது லுலு குழுமத் தலைவர் யூசுஃப் அலியும் ரஜினிகாந்த் உடன் இருந்தார். இந்த விசா நடைமுறைகள் அனைத்தையும் UAE-ல் இருந்து யூசுஃப் அலி தான் பார்த்துக்கொண்டார்.
UAE அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் “golden visa வழங்கப்பட்ட UAE அரசுக்கு நன்றி, விசா பெற உதவியாக இருந்த தனது நண்பர் லூலு குரூப் தலைவர் யூசப் அலிக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். அவர் இல்லாமல் இந்த கௌரவம் கிடைத்திருக்காது என்றும் குறிப்பிட்டிருந்தார்”.
இந்தியாவில் இதற்க்கு முன்பு ஹிந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், சஞ்சய்தத், ஷாருக்கான், ஊர்வசி ரவுடாலா ஆகியோரும் மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், பிருத்திவிராஜ் மற்றும் பாடகி சித்ரா ஆகியோர் பெற்றுள்ளனர்.
அதிக முறை தேசிய விருது வென்ற Tamil நடிகர்கள்
தமிழில் கமல்ஹாசன், விக்ரம், பார்த்திபன், சிம்பு, விஜய் சேதுபதி, யுவன் ஷங்கர் ராஜா, த்ரிஷா, ஆண்ட்ரியா, மீனா, மீரா ஜாஸ்மின், ஜோதிகா, அமலா பால், காஜல் அகர்வால், ராய் லட்சுமி உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளார்கள்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]