Home Cinema News 15 நாள் கால்ஷீட் 10 கோடி சம்பளம்… ‘Coolie’ படத்தில் Sathyaraj!

15 நாள் கால்ஷீட் 10 கோடி சம்பளம்… ‘Coolie’ படத்தில் Sathyaraj!

ரஜினிகாந்த் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ‘Coolie’ படத்தில் சத்யராஜ் நடிக்க இருக்கிறார். எவ்வளவு சம்பளம் தெரியுமா?! 10 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் Sathyaraj.

by Santhiya Lakshmi

ரஜினிகாந்த் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ‘Coolie’ படத்தில் சத்யராஜ் நடிக்க இருக்கிறார். எவ்வளவு சம்பளம் தெரியுமா?! 10 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் Sathyaraj.

ரஜினிகாந்தும், சத்யராஜும் கடைசியாக சேர்ந்து நடித்தப்படம் ‘மிஸ்டர் பாரத்’. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப்பிறகு சத்யராஜும், ரஜினிகாந்தும் இணைந்து இப்போது நடிக்கிறார்கள். ‘கூலி’ படத்தில் வில்லனாக இல்லாமல் ரஜினிகாந்த்தின் நண்பனாக நடிக்கிறார் சத்யராஜ்.


ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த காலத்தில் வெறும் லட்சங்களில் சம்பளம் வாங்கியவர் சத்யராஜ். ‘பாகுபலி’ படம் அவரது கரியரில் திருப்புமுனையாக அமைய அதன்பிறகு சிறிய படமோ, பெரிய படமோ, சின்ன கதாபாத்திரமோ, பெரிய கதாபாத்திரமோ கோடிகளில் மட்டும்தான் சம்பளம் என்று உறுதிமொழி எடுத்துவிட்டார் சத்யராஜ்.

நடிக்கவரும் முன்பே பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சத்யராஜுக்கு, சென்னை, கோவை, ஊட்டி எனப்பல இடங்களில் சொத்துக்கள் இருக்கிறது. ‘’நடிச்சிதான் நான் சம்பாதிக்கணும்னு இல்ல’’ என சம்பளத்தைக் குறைத்துப்பேசுபவர்களிடம் நேரடியாகவே சொல்லிவிடுகிறார் சத்யராஜ். சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்கவே 1 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டிருந்த சத்யராஜுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசி லாக் செய்திருக்கிறது சன் டிவி.

காவேரி விவகாரத்தில் ரஜினியை மேடையில் வைத்துக்கொண்டே அவரைக் கடுமையாகத் தாக்கியும், விமர்சித்தும் ஒருமையில் பேசினார் சத்யராஜ். ‘’ரஜினிகாந்த் பேரைச்சொல்லித்தான் எனக்கு கைதட்டல் வரணும்னா எனக்கு கைதட்டலே வேணாம்’’ எனப்பேசியவர் இப்போது ரஜினியுடன் சேர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். அதைவிட தன்னைக் கடுமையாகத் தாக்கிப்பேசியவரை தன்னுடன் நடிக்க சம்மதம் சொல்லியிருப்பதை ரஜினி ரசிகர்களும் வியப்பாகப் பார்க்கிறார்கள்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.