Rajinikanth-ன் மெஹா ஹிட் படங்களில் ஒன்றான அண்ணாமலையில் பால்காரன் கேரக்டரில் நடித்து உலகம் முழுவதும் பால்காரர்களின் பெருமையை அறியவைத்தார்.
Rajinikanth படங்கள் என்றாலே அவர் நடிக்கும் கேரக்டர்கள் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து பெரிய அளவில் கொண்டாடப்படும். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான கேரக்டரில் நடித்து அசத்தி வந்தார். அந்த வகையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் “அண்ணாமலை” படத்தில் பால்காரனாக நடித்திருந்தார்.

படத்தின் இன்ட்ரோ பாடலிலே “வந்தேன்டா பால்க்காரன்” என்ற பாடல் மூலம் பல கருத்துக்களை கூறினார். அனைத்து குழந்தைகளுக்கும் பால் அவசியமான ஒன்று என்பதையும், மாட்டின் அருமையையும் கூறியிருப்பார்.
சென்னையில் பால்க்காரனாக நடுத்தர குடும்பத்தில் வாழ்ந்து வரும் ரஜினியும், அதே பகுதியில் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த சரத் பாபுவும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்து வருவார்கள். இவர்களுக்குள்ளான நட்பு காசு, பணத்தை தாண்டி நட்பிற்கு இலக்கணமாக பழகி வருவார்கள்.
இருவரது நட்பு ஆரம்பம் முதலே சரத் பாபுவின் அப்பா ராதா ரவிக்கு பிடிக்காமல் இருந்தது. ஒரு சமயம் ரஜினியின் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு ஹோட்டல் கட்ட ராதா ரவி முடிவு செய்கிறார்.
அப்போது சரத் பாபு மற்றும் ராதா ரவி இருவரும் Rajinikanth இடத்தை ஏமாற்றி வாங்கிக்கொள்கிறார்கள். மேலும் பெரிய ஹோட்டலுக்கு அருகில் குடிசை வீடு இருந்தால் நல்ல இருக்காது என்று ரஜினிக்கு தெரியாமல் வீட்டை இடித்து விடுவார்கள்.

இதை அறிந்த ரஜினி சரத் பாபு வீட்டிற்கு சென்று தன்னையும், தன் குடும்பத்தையும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்த உங்களை பழிவாங்காமல் விடப்போவதில்லை என்று கூறும் மாஸ் டயலாக் விசில் பறக்கும். வாழ்வில் படிப்படியாக முன்னேறி சரத் பாபுவை விட பெரிய பணக்காரணவர் ரஜினி.
ஒரு சமயம் சரத் பாபுவின் தொழிலை நஷ்டம் ஏற்பட்டு அனைத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இதனை அறிந்த ரஜினி தனது சபதம் நிறைவேறி விட்டது என்று எண்ணாமல் தனது நண்பன் குடும்பத்தை காப்பாற்ற ஏலத்தில் எடுத்த சொத்துக்களை சரத் பாபுவுக்கு திருப்பி தந்து விடுவார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ராதா ரவி தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ப்பார்.
1992-ல் கவிதாலயா தயாரிப்பில், தேவா இசையமைக்க, ரஜினிகாந்த், குஷ்பு, சரத் பாபு, ராதா ரவி, ரேகா, ஜனகராஜ், வினு சக்ரவர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். படம் ரிலீஸ் ஆகி 175 நாட்கள் வரை ஓடியது. ஒவ்வொரு தியேட்டரிலும் 50-வது நாள், 100-வது நாள், 150-வது நாள் என போஸ்டர் ஒட்டி ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வந்தனர். பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சனில் அன்றைய மதிப்பில் 16 கோடி வரை வசூலித்தது.

வந்தேன்டா பால்காரன், கொண்டையில் தாளம் பூ, வெற்றி நிச்சயம் போன்ற பாடல்கள் இன்றளவும் கேட்க்கும் வகையில் அற்புதமாக எழுதியுள்ளார் வைரமுத்து.
Rajinikanth ஸ்டைல் வழக்கம் போல மாஸாக இருந்தது. குஷ்பு– ரஜினி ஜோடி ரசிக்க வைத்தது. ராதா ரவியின் நடிப்பும், “கூட்டி கழுச்சு பார் கணக்கு சரியா வரும்” என்ற டயலாக், கிளைமாக்ஸ் காட்சியில் உணர்ச்சி வசப்படும் காட்சிகள் என தனது நடிப்பை கச்சிதமாக செய்திருப்பார். படத்தில் நடித்த அனைவருமே தனது நடிப்பை சிறப்பாக செய்திருப்பார்கள்.
படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் பார்த்து கொண்டாடக்கூடிய எவர்க்ரீன் படமாக இருந்து வருகிறது. நட்பு என்பது எந்தக்காலத்திலும் மாறாது என்றும், அதை விட்டுக்கொடுக்கவும் முடியாது என்பதை அழகாக கூறியிருப்பார்.
முக்கிய நடிகர்கள்:
ரஜினிகாந்த் | அண்ணாமலை |
குஷ்பு | சுப்புலக்ஷ்மி |
சரத் பாபு | அசோக் |
ராதா ரவி | கங்காதரன் |
ரேகா | சாந்தி |
ஜனகராஜ் | பஞ்சு |
நிழல்கள் ரவி | சற்குணம் |
வினு சக்ரவர்த்தி | ஏகாம்பரம் MLA |
மனோரமா | சிவகாமி |
பிரபாகர் | டான் பெர்னாண்டஸ் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]