Home Cinema News ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில்! 

‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில்! 

ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் சென்னையில் நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. 

by Vinodhini Kumar

TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘வேட்டையன்’. 2024 தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் செப்டம்பர் 20ம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வேட்டையன் movie Audio Launch event on September 20

‘ஜெய் பீம்’ படத்துக்கு பிறகு, இயக்குனர் TJ ஞானவேல் யாருடன் இணைந்து எந்த மாதிரியான கதையை திரைப்படமாக்க போகிறார் என்ற கேள்விக்கு பதிலாக, நடிகர் ரஜினிகாந்த் உடன் மட்டுமல்லாமல், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் பஹத் பாசில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங்க், ராணா டகுபதி, அபிராமி, துஷாரா விஜயன் என பெரிய நடிகர் பட்டாளத்தை இயக்கியுள்ளார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, டப்பிங் பணிகள் நடந்துவந்த நிலையில், இந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் முன்னோட்டம் வெளியாகும் தேதியை வெளியிட்டது, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா. 

இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களின் முன்னோட்டமும் தினமும் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தனர். இதனையடுத்து இன்று ‘இறுதி சுற்று’ படத்தில் நடித்து பரிட்சயமான நடிகை ரித்திகா சிங் உடைய பாத்திரத்தை பற்றிய முன்னோட்டம் விடியோவாக வெளியானது. ரூபா என்ற பெண் காவல் அதிகாரியாக ‘வேட்டையன்’ படகில் இவர் நடிக்கிறார். 

வேட்டையன் படத்தில் மலேசியா வாசுதேவன் குரலில் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது! 

வரும் செப்டம்பர் 20ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடக்கப்போகும் இப்படத்தின் இசை வேலியோட்டு விழாவுக்கான எதிர்பார்ப்பு, கடந்த வாரம் வெளியான ‘மனசிலாயோ’ பாடல் மூலம் மேலும் அதிகரித்துள்ளது.  

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.