Home Cinema News வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ விரைவில்!

வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ விரைவில்!

அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்தின் முதல் பாடல், 'மனசிலாயோ' பாடல் விரைவில் வெளியாகும் என தகவல். 

by Vinodhini Kumar

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக இயக்குனர் T J ஞானவேல் உடன் இணையும் படம் ‘வேட்டையன்’. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ என்ற பெயரில் செப்டம்பர் 9 வெளியாகவுள்ளது. 

இந்த பாடலை பிரபலமான பாடகர் ஒருவரின் குரலில் உருவாகியுள்ளதாகவும் அந்த பாடகர் யாராக இருக்கும் என்ற கேள்வியுடன் ‘மனசிலாயோ’ பாடலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இப்போது AI தொழில்நுட்பத்தின் வழியாக மறைந்த பாடகர்களின் குரல்களை மீண்டும் பயன்படுத்துவது பிரபலமாகிவருகிறது. 

மனசிலாயோ பாடப்போவது யார்?

“Bringing Back the voice of a Legendary Singer” என்று குறியிருப்பதாலும், சூப்பர் ஸ்டாரின் என்ட்ரி பாடல்கள் சிலவற்றை இதற்கு முன்னர் மறைந்த பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடியிருப்பதால், இவராக இருக்கும் என்றும் பேசப்படுகிறது. 

S P Balasubrahmanyam a popular guess for மனசிலாயோ song in Vettaiyan

ஏற்கனவே ‘தர்பார்’ படத்தில் ‘சும்மா கிழி’ மற்றும் ‘பேட்ட’ படத்தில் ‘மரண மாஸ்’ பாடல்களில் அனைவருக்கும் பிடித்த பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களை அனிருத் படவைத்துளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், ‘வேட்டையன்’ படத்திலும் இதை தொடர்வார் என நம்பலாம். 

காலம் கடந்து ரசிக்க வைக்கும் S. P. Balasubrahmanyam அவர்களின் இசை காவியங்கள்

பல ஆண்டுகளுக்கு பின் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உடன் சேர்ந்து இந்த படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். மேலும் இப்படத்தில் நடிகைகள் மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், நடிகர் ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டொபேர் 10 என்ற தகவல் வெளியானது.   

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.