Home Cinema News ரஜினியின் ‘பாட்ஷா’ பட தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

ரஜினியின் ‘பாட்ஷா’ பட தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

எம்.ஜி.ஆர். கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சரும், பிரபல தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, சிகிச்சை பலனின்றி ஆர்.எம்.வீரப்பன் (வயது 98) இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது.

by Naveen Dhayalan

எம்.ஜி.ஆர். கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, சிகிச்சை பலனின்றி ஆர்.எம்.வீரப்பன் (வயது 98) இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது.

கோலிவுட்டில் ஆர்.எம்.வீரப்பன் பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதி, தயாரிக்கவும்  செய்திருக்கிறார். இவர் தனது ‘சத்யா மூவீஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்த முதல் படம் ‘தெய்வத்தாய்’. இதில் ஹீரோவாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். 

இந்த படத்துக்கு பிறகு எம்.ஜி.ஆரின் ‘நான் ஆணையிட்டால், காவல்காரன், கண்ணன் என் காதலன், ரிக்ஷாக்காரன், இதயக்கனி’, ரஜினிகாந்தின் ‘ராணுவவீரன், மூன்று முகம், தங்க மகன், பணக்காரன், பாட்ஷா’, கமல்ஹாசனின் ‘காக்கி சட்டை, காதல் பரிசு’ போன்ற பல படங்களை தயாரித்தார்.  ஆர்.எம்.வீரப்பனின் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.