Home Cinema News ‘JAILER 2’வுக்கு பிறகு ரஜினி நடிக்கும் ‘THALAIVAR 173’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

‘JAILER 2’வுக்கு பிறகு ரஜினி நடிக்கும் ‘THALAIVAR 173’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

ரஜினிகாந்த் கைவசம் மூன்று படங்கள் இருக்கிறது. தற்போது, 'தலைவர் 173' படம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

by Santhiya Lakshmi

கோலிவுட்டின் டாப் ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ‘வேட்டையன்’, ‘தலைவர் 171’, ‘ஹுக்கும்’ (ஜெயிலர் 2) ஆகிய 3 படங்கள் உள்ளது. இதில் த.செ.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஷூட்டிங் வருகிற மே மாதத்தில் நிறைவடையப்போகிறது.

2 2

இப்படத்தை இந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் ‘தலைவர் 171’ படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் டாப் கியரில் நடந்து கொண்டிருக்கிறது. 

இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கப்போகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு யெஸ் சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கப்போகிறார். இந்த படம் ரஜினியின் கேரியரில் 173-வது படமாம். மிக விரைவில் இதன் இயக்குநர் யார்? என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.