Home Cinema News ‘எந்திரன்’ படத்தில் நான் விட்ட இடத்தை  நண்பர் ரஜினிகாந்த் பிடித்துவிட்டார் ‘- கமல்ஹாசன்.

‘எந்திரன்’ படத்தில் நான் விட்ட இடத்தை  நண்பர் ரஜினிகாந்த் பிடித்துவிட்டார் ‘- கமல்ஹாசன்.

by Sruthi Balasubramanian

கோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும்  கமல்ஹாசன் ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இந்தியன்- 2’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜூலை 12-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

கமல்ஹாசன் Indian 2 poster

அந்த வகையில் நேற்றைய தினம் மலேசியாவில் ‘இந்தியன் – 2’ திரைப்படத்தின் பிரமோஷன் பிரஸ்மீட்கள் நடந்தன. அப்போது நடிகர் கமல் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின்  நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்த ‘எந்திரன்’ திரைப்படத்தில் ஏன் தான் நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை சொன்னார். 

‘’ ‘எந்திரன்’ படத்தில் இயக்குநர் ஷங்கர் என்னைத்தான் முதலில் அணுகினார். கால்ஷீட், சம்பளம், மார்க்கெட் போன்றவற்றின் பிரச்சினைகளால் அப்படத்தில் என்னால் அப்போது நடிக்கமுடியவில்லை. நான் நடிக்காததால் அப்படத்தை இயக்குனர்  ஷங்கர் கைவிட்டுவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் நடிகர் ரஜினிகாந்தை வைத்து பெரிய ஹிட் கொடுத்து விட்டார். நான் விட்ட இடத்தை ரஜினி பிடித்துவிட்டார்’’ என சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன்.

indian 2 dir and kamal

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.