Home Cinema News ‘சீயான் 62’வில் இணைந்த ரஜினியின் ‘வேட்டையன்’ பட நடிகை!

‘சீயான் 62’வில் இணைந்த ரஜினியின் ‘வேட்டையன்’ பட நடிகை!

by Sivaanantham RB


கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சீயான்‘ விக்ரம் கைவசம் ‘தங்கலான்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சீயான் 62’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது. இதில் அருண் குமார் இயக்கும் ‘சீயான் 62’ படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

tnm import sites default files Vikram 1200

இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் துஷாரா விஜயன் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இப்போது ரஜினியின் ‘வேட்டையன்’ படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத ‘சீயான் 62‘வை ரியா ஷிபுவின் ‘HR பிக்சர்ஸ்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது. இதில் விக்ரம், துஷாராவுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இதற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். 

இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான நாளிலிருந்தே ஆடியன்ஸின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.