தமிழில் ‘ஜோக்கர்’ மற்றும் ‘ஆண் தேவதை’ ஆகிய படங்களில் நேர்த்தியாக நடித்து பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன். தன்னுடைய தன்மையான, பொறுமையான விளையாட்டால் இறுதி சுற்று வரை சென்று மூன்றாம் இடம் பிடித்தார்.
இவர் இப்போது தன்னுடைய காதலர் லொவெல் தவான் அவர்களை நெருங்கிய குடும்பத்தார் சூழ கரம்பிடித்தார். இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்த நிலையில், ரிஷிகேஷில் இருவரும் கங்கை நதியோரம் திருமணம் செய்துகொண்டனர்.

ரம்யா பாண்டியன் கணவர் லொவெல் தவான் யார் ?
லொவெல் தவான் ஒரு யோகா பயிற்சியாளர் ஆவார். இவர் குருதேவ் ரவிசங்கர் அவருடைய தீவிர சீடராக அவரின் வழியே வாழ்க்கை நெறிமுறைகளையும் பலருக்கு கூறி வருபவர். இவரின் ஒரு யோகா பயிற்சி வகுப்பில் தான் நடிகை ரம்யா பாண்டியனை சந்தித்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். வடமாநிலத்தவர் என்றாலும் இருவரின் மனமொத்து ரிஷிகேஷில் உள்ள சிவபுரி என்ற இடத்தில் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டுவருகிறது. கங்கை நதிக்கரையில், அழகான, எளிமையான அலங்காரங்களும், நெருக்கமான குடும்பத்தினர் மட்டும் ஒன்று சேர்ந்து இவர்களின் திருமணம் நடந்துள்ளது அனைவராலும் பகிரப்பட்டுவருகிறது. இவர்களின் திருமண வரவேற்பு விழாவை நவம்பர் 15ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சிவப்பு பட்டு புடவையுடன், நடிகை ரம்யா பாண்டியன் தனது கணவர் லொவெல் தவானை தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். பட்டு வெட்டி சட்டையில் இவர்களின் ஜோடியின் கல்யாண சம்பிரதாயங்களை ரம்யா பாண்டியனின் மாமாவும் நடிகருமான அருண் பாண்டியன் செய்து வைத்தார். இந்த நெருக்கமான திருமண நிகழ்வில் ரம்யா பாண்டியனின் மாமா மகளான நடிகை கீர்த்தி பாண்டியனும் அவரின் கணவர் நடிகர் அசோக் செல்வனும் பங்கேற்றனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]