Home Cinema News மறைந்த நடிகை சௌந்தர்யாவின் வழக்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படும் ராஷ்மிகா மந்தனா!

மறைந்த நடிகை சௌந்தர்யாவின் வழக்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படும் ராஷ்மிகா மந்தனா!

மறைந்த நடிகை சௌந்தர்யா குறித்து ராஷ்மிகா மந்தனா பகிர்ந்திருக்கும் தகவல் பேசுபொருளாகியிருக்கிறது.

by Sruthi Balasubramanian

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் ‘வாரிசு’ திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தனுஷ், நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘குபேரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

ராஷ்மிகா மந்தனா

சேகர் கமுலா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும்  இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் Rashmika Mandanna உடைய​ Glimpse வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.  

இந்நிலையில் Rashmika Mandanna மறைந்த பிரபல முன்னணி நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு படத்தில்  நடிக்க  தான் ஆசைப்படுவதாக தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். ‘’மறைந்த நடிகை Soundaryaவின் வாழ்க்கையை பயோபிக்காக எடுத்தால் அதில் நான் Soundaryaவாக நடிக்க ரெடி. செளந்தர்யாவாக நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. சினிமாவுக்கு வருவதற்கு முன்பிலிருந்து Soundaryaவின் நடிப்புக்கு தீவிர ரசிகை. எனக்கும் சௌந்தர்யாவின் சாயல்  இருப்பதாக பலரும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அதற்கான வாய்ப்பு வந்தால் நான் தயாராக இருக்கிறேன்’’ என்று பேசியிருக்கிறார் Rashmika Mandanna.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.