தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஒரு கதாநாயகன் மற்ற நாயகன் திரைப்படத்தில் கேமியோவாக வருவதே அரிது. அதுவும் நட்பின் அடிப்படையில் நடிப்பர். ஆனால் தற்போது அது மாறியிருக்கிறது என்றே கூறலாம். முன்னணி கதாநாயகர்கள் வில்லன், துணை நடிகர் போன்ற பாத்திரங்கள் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். பிற மொழிகளில் இது போன்ற முயற்சிகள் ஏற்கனவே நடந்து வருகிறது, அது நமது கோலிவுட்டில் நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எண்ண ஆரம்பித்துவிட்டனர். இது போன்ற புதிய முயற்சிகளை ரசிகர்களும் வரவேற்கின்றனர் என்று தெரிந்த பிறகு பல ஹீரோக்கள் தங்களின் பயணத்தில் மாற்றம் செய்துள்ளனர்.
அதில் முக்கியமான நடிகர் Ravi Mohan ஆவார். இதுவரை நாயகனாக நடித்து வந்த ரவி மோகன் முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முற்றிலும் மாறுபட்ட இந்த முயற்சி இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் முதல் திரைப்படம் ‘ஜெயம்’ முதல் இந்த ஆண்டு வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ வரை தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு பாத்திரத்தில் உள்ள ஆழமான உணர்வுகளை மிகவும் எளிமையாக மக்களுக்கு கடத்திச் செல்லும் வல்லமை படைத்த கலைஞர். இவரை இன்னும் பல கோணங்களில் காண வேண்டும் என்று சினிமா காதலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நடிகர் Ravi Mohan திரைப்படங்கள்
1.கராத்தே பாபு
2023 ஆம் ஆண்டு வெளியான ‘டாடா’ பட இயக்குனருடன் முதல் முறை கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் Ravi Mohan. மக்கள் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக இருக்கும் சண்முகம் பாபு என்கிற கராத்தே பாபு வாழ்க்கையை மையப்படுத்திய கதை இந்த திரைப்படம். இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க திரைப்படத்தில் இதுவும் ஒன்று.
- நடிகர்கள் – ரவி மோகன், சக்தி வாசுதேவன், நாசர், VTV கணேஷ்
- இயக்குனர் – கணேஷ் கே.பாபு
- இசை – சாம் C.S.
- தயாரிப்பு – Screen Scene Media Entertainment
- வெளியாகும் நாள் – TBA
2.பராசக்தி
1965ல் ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் வெடித்த மிகப்பெரிய மக்கள் & மாணவர்கள் எழுச்சியை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. நட்சத்திர பட்டாளம் மிக்க ‘பராசக்தி’ திரைப்படத்தில் முதன் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் ரவி.
- நடிகர்கள் – ரவி மோகன், சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீ லீலா
- இயக்குனர் – சுதா கொங்காரா
- இசை – ஜி.வி.பிரகாஷ் குமார்
- தயாரிப்பு – Dawn Pictures
- வெளியாகும் நாள் – TBA
3.ஜீனி
100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள பாண்டஸி காமெடி திரைப்படம் ‘ஜீனி’. அறிமுக இயக்குனர் அர்ஜுனன் இயக்கத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் நடிகர் ரவி மோகன். தற்போது ஆக்ஷன் அதிரடி நிறைந்த படங்களே வருகின்ற நிலையில் குழந்தைகளுக்கு என்று தனித்துவமாக யாரும் படம் இயக்குவதில்லை. ஆதலால் இந்த படம் குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
- நடிகர்கள் – ரவி மோகன், கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்சன், வமிகா கப்பி
- இயக்குனர் – அர்ஜுனன்
- இசை – AR ரஹ்மான்
- தயாரிப்பு – Vels Film International
- வெளியாகும் நாள் – TBA
4.தனி ஒருவன் 2
2023 ஆம் ஆண்டு இந்த இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது. இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறிய நிலையில் விரைவில் முடிவடைந்து ‘தனி ஒருவன் 2’ வெள்ளித்திரைக்கு வருகை தரும் என்று அனுமானிக்கப்படுகிறது.
- நடிகர்கள் – ரவி மோகன், நயன்தாரா
- இயக்குனர் – மோகன் ராஜா
- இசை – சாம் C.S.
- தயாரிப்பு – AGS Entertainment
- வெளியாகும் நாள் – TBA
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]