Home Cinema News ரீ-ரிலீஸ் தீனா.. Ajith Birthday Special

ரீ-ரிலீஸ் தீனா.. Ajith Birthday Special

இன்று Ajith Kumar பிறந்த நாள் என்பதால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'தீனா' திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

by Naveen Dhayalan

தமிழ் சினிமாவின் ‘தல’யாக வலம் வருபவர் Ajith. ஓப்பனிங் ஷோ கிங்கான அஜித்குமாரின் நடிப்பில் தற்போது ‘விடாமுயற்சி‘ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க உள்ளார். 

Ajithkumar

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்று அஜித் பிறந்த நாள் என்பதால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘தீனா’ திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் திரையரங்குகளில் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆர்ப்பரிக்க தொடங்கியுள்ளது. 

விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தின் ரீ ரிலிஸ் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் அதற்கு போட்டியாக ‘தீனா’ ரீ ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அஜித் நடிப்பில் உருவாக உள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஷூட்டிங் கூட இன்னும் தொடங்காத நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டை உரிமையை பிரபல நிறுவனம் கிட்டத்தட்ட 22 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.