இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் “கூலி(Coolie)” திரைப்படத்திற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய பொழுது உடல் நலக்குறைவால் கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள Apollo மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இடைவிடாத படப்பிடிப்பு, மிகுந்த பயணம் மற்றும் வயிற்று வலியின் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது சூப்பர் ஸ்டாரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களில் கூறப்படுகிறது. 70 வயது மேற்பட்டவர்களுக்கு செய்யப்படும் அதிநவீன சிகிச்சை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொடுப்பதற்காக மருத்துவமனையில் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக Apollo மருத்துவமனையில் உள்ள ICU ward-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று இரவு முதல் தற்போது வரை தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

அதிநவீன சிகிச்சை முடிந்தவுடன் சாதாரண ward-க்கு மாற்றப்படுவார் என்று மருத்துவமனையில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து எந்த ஒரு செய்தியும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த “வேட்டையன்” திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ அந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?… தீயாய் பரவும் தகவல்!
நடிகர் ரஜினிகாந்த் சாதாரண மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பிரத்தியேக அறிக்கை விடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து குணமடைய வேண்டும் என்று அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களோடு நானும் வேண்டிக் கொள்கிறேன் என்று தமிழக ஆளுநர் ரவி கூறியுள்ளார்.
சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த பலவிதமான வதந்திகளும் யூகிப்புகளும் வெளிவந்த நிலையில். தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்பல்லோ மருத்துவமனை அவரின் தற்போதைய ஆரோக்கிய நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை கூறியதாவது,
“திரு.ரஜினிகாந்த் செப்டம்பர் 30ம் தேதி 2024 அன்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் இருந்து வெளியேறும் பிரதான ரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை அல்லாத Transcatheter முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூத்த தலையிட்டு இருதய நோய் நிபுணர் டாக்டர்.சாய் சதீஷ் பெருநாடியில் ஒரு ஸ்டெட்டை வைத்து வீக்கத்தை முழுவதுமாக மூடினார் (என்டோ வாஸ்குலர் ரிப்பேர்). திட்டமிட்டபடி இந்த நடைமுறை நடந்தது என்பதை அவரது நலன் விரும்பிகளுக்கும் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். திரு.ரஜினிகாந்த் நிலையாக இருக்கிறார். நன்றாக இருக்கிறார். இரண்டு நாட்களில் அவர் வீட்டுக்கு திரும்பிவிடுவார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]