தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அர்ஜுன், சார்லி, வெங்கட் பிரபு ஆகியோர் வீட்டில் சமீபத்தில் திருமண விழா நடைபெற்றுள்ளது.
2000 காலகட்டத்தில் நகைச்சுவை நடிகராக கலக்கிக்கொண்டு இருந்த சார்லியின் மகன் திருமணம், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமைய்யா மகன் உமாபதி ஆகியோரின் திருமணம், வெங்கட் பிரபு தம்பி பிரேம்ஜிக்கு திருமணம் என ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து தமிழ் சினிமா பிரபலங்கள் வீட்டில் கெட்டிமேள சத்தம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆக்சன் கிங் என்று 90’s கிட்ஸ் கொண்டாடி மகிழ்ந்த அர்ஜுன் மகளான ஐஸ்வர்யா மற்றும் முன்னணி காமெடி நடிகரான தம்பி ராமைய்யா மகன் உமாபதி ஆகியோரும் காதலித்து நிலையில் இரு வீட்டினர் சம்மதத்துடன் சமீபத்தில் நிச்சியம் செய்து கொண்டனர். தற்போது இவர்களது திருமணம் கெருகம்பாக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இதில் நடிகர் விஷால், விஜயகுமார், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். வரவேற்பு விழாவில் மேலும் பிரபலங்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
காமெடி நடிகராக அறிமுகமான சார்லி தற்போது குணச்சித்திர நடிகராகவும் நடித்து கலக்கி வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அனுபவமும் இவருக்கு உள்ளது. அவரது மகன் ஆதித்யாவின் திருமணம் தற்போது சிறப்பாக நடைபெற்றது. அதில் சினிமா பிரபலங்கள், முதல்வர் ஸ்டாலின் என பலரும் மணமக்களை வாழ்த்தி வந்தனர்.

பாலசந்தர் மூலம் அறிமுகமான சார்லி ஏறக்குறைய 800-க்கு மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்துள்ளார்.
பல ஆண்டுகளாக சிங்கள் ஆக இருந்த பிரேம்ஜி தற்போது திருமணம் செய்து பலரையும் ஆச்சரியபட வைத்துள்ளார். வெங்கட் பிரபுவின் தம்பி, கங்கை அமரனின் இளைய மகன் என தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வந்தார் பிரேம்ஜி. அவருக்கு 20 வயது வித்தியாசம் உள்ள பெண்ணுடன் திருமணம் முடிந்தது. பிரேம்ஜி வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியில் வேலை செய்து வந்தவர் இந்து. வங்கிக்கு செல்லும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இந்துவை மணமுடித்தார் பிரேம்ஜி.

தற்போது இவர்கள் திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]