2D தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யாவின் 44வது படத்தின் தலைப்பு படத்தின் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு ‘Retro’ என தலைப்பிட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் டீசரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. இன்று காலை வெளியான டீசரில் சூர்யா மற்றும் பூஜா ஹெஜிதே இருவரும் ஒரு கோவில் படியில் அமர்ந்திருக்க, தன்னுடைய வாழ்க்கையில் இனிமேல் வன்முறை கிடையாதது என்றும், அடிதடி, வம்புகளுக்கு போக மாட்டேன் என்றும் சத்தியம் செய்ய உடனே அதற்கு முரணாக நடக்கும் காட்சிகள் காட்டப்பட்டு டீசர் ஆரம்பிக்கிறது.
நடிகர் சூர்யா ‘Retro’ படத்தின் இரண்டு தோற்றத்தில் வருவதும், முதலில் கட்டப்பட்டுள்ள தோற்றத்தில் பூஜா ஹெஜிடேவை திருமணம் செய்துகொள்ள கேட்பதும் இரண்டாவது தோற்றத்தில் அனைவருக்கும் ஏற்கனவே வெளியிட்ட தோற்றத்தில் சண்டைக் காட்சிகளில் வருவது கால மாற்றத்தை காட்டுவதாக தெரிகிறது. முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாக அமையும் என தெரிகிறது, மேலும் பல முன்னணி மற்றும் பிரபல நடிகர்கள் நடிக்கும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.
THE ONE you’ve been waiting for ❤️🔥#RETRO A love story on adrenaline💥#Suriya44 Title Teaser
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) December 25, 2024
▶️ https://t.co/qNdZ94sxtA#LoveLaughterWar #TheOneXmass@Suriya_Offl @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens @kshreyaas @cheps911 @jacki_art… pic.twitter.com/OC6SsCBcXu
சூர்யா, பூஜா ஹெஜிதே இருவரும் காதலர்களாக வரும் நிலையில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் சூர்யாவின் தந்தையாக நடிக்கிறார். ‘Retro’ படத்தில் இவர்களை தவிர நடிகர் நாசர், கருணாகரன், ஜெயராம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 2025ன் முதல் பாதியில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]