வின்னர் படத்தில் கட்டத்துரை கேரக்டரில் நடித்த Riyaz Khan மற்றும் குக் வித் கோமாளி சீசன் 1-ல் பங்கேற்ற உமா ரியாஸ் ஆகியோரின் மகன் ஷாரிக் ஹாசனுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.
தெலுங்கு, மலையாளம், தமிழ் என பெரும்பாலும் குணசித்ர மற்றும் வில்லன் கேரக்டரில் நடித்து வருபவர் Riyaz Khan. 2003-ல் வெளியான வின்னர் படத்தில் வடிவேலுவை வம்பிழுக்கும் கட்டத்துரை கேரக்ட்டரில் நடித்து பெரிய அளவில் தெரியவந்தார்.

அதற்கு முன்பு பத்ரி படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார். மாஸ், பொன்னியின் செல்வன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ரியாஸ் கான் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் “இனியா” தொடரில் வில்லனாக நடித்து வருகிறார்.
Riyaz Khan மனைவி உமா ரியாஸ் அன்பே சிவம் படத்தில் மெஹ்ருன்னிசா கேரக்டரில் நடித்திருந்தார். பின்னர் அருள்நிதி நடிப்பில் வெளியான “மௌன குரு” படத்தில் நடித்து கவனம் பெற்றார். அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகைக்கான Vijay Award மௌன குரு படத்தில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் கேரக்டருக்கு வழங்கப்பட்டது. மேலும் குக் வித் கோமாளி சீசன் 1-ல் கலந்து கொண்டு ரன்னர்அப் ஆக இருந்தார்.

உமா ரியாஸ் அவர்களின் அம்மா கமலா காமேஷ், இசையமைப்பாளர் காமேஷ் அவர்களின் மனைவி. 80-களில் விசுவின் படங்களில் பெரும்பாலும் தனது எதார்த்த நடிப்பால் கவனம் பெற்றிருந்தார். குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம், மூன்று முகம், பெண்மணி அவள் கண்மணி, கடலோர கவிதைகள், சின்ன கவுண்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார். 2022-ல் RJ. பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்திலும் நடித்திருந்தார்.

Riyaz Khan, உமா ரியாஸ் ஆகியோருக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமந்த் ஹாசன் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் 2-ல் போட்டியாளராகப் பங்கேற்றார். அதை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 1-ல் அனிதா சம்பத்துடன் சேர்ந்து பங்கேற்று டைட்டில் வின்னரானார். மேலும் பென்சில், டான், ஜிகிரி தோஸ்த்து, நேற்று இந்த நேரம் போன்ற படத்திலும் நடித்துள்ளார்.
அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என சினிமா குடும்பத்தில் பிறந்த ஷாரிக் ஹாசன் பெரிய அளவில் சினிமாவில் ஜொலிக்கவில்லை என்றாலும் தற்போது அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது.

ஷாரிக் ஹாசன் மற்றும் மரியா ஜெனிபர் ஆகியோருக்கு சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் வரும் 8-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு முன்பான மெஹந்தி பங்ஷன் நடைபெற்ற புகைப்படத்தை ஷாரிக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் உமா ரியாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷாரிக் மற்றும் மரியா ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருவருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]