RJ -வாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனது கனவை நோக்கி சென்றுக்கொண்டிருந்த Rj பாலாஜி நடிகராக மட்டுமல்லாது இயக்குனர், பேச்சாளர் என தன்னை ஒவ்வொரு காலத்திலும் அப்டேட் செய்து வந்தார்.
RJ -வாக இருந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்க காமெடியன், ஹீரோ, இயக்குனர் என அடுத்தடுத்த கட்டத்திற்கு தன்னை சினிமாவில் அடையாளப்படுத்தி வருகிறார்.
ICT அகாடெமியின் ஒன்பதாவது லீடர்ஷிப் சப்மிட் – 2024 விழா அக்டோபர் 23 -ஆம் தேதி கோவைவில் நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் 2,500-க்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். அந்த விழாவில் சமூகத்திற்கும், திரைத்துறைக்கும் பல நல்ல மாற்றங்களை தந்த RJ . பாலாஜிக்கு “யூத் ஐகான் விருது” வழங்கி கௌரவப்படுத்தினர்.
இந்த விருதை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரான டாக்டர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். விருது வழங்கிய பின்னர் அவரின் இத்தகைய முயற்சி மதிக்கத்தக்கது, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இளைய தலைமுறையினருக்கு உந்துகோலாக இருந்துவருகிறார் என பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
சீரியஸான கேரக்டரில் RJ . பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் பட டீஸர்
விருது பெற்ற பின் RJ. பாலாஜி “இந்த விருதைப் பெறுவதில் பெருமைபடுகிறேன், சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த இதுபோன்ற விருதுகள் உத்வேகம் தரும். இளைஞர்கள் அவர்களின் கனவுகளை அடைய என்னால் முடிந்த உதவியை செய்துவருவேன்” என கூறினார்.
இந்த விழாவின் நோக்கம் அடுத்த தலைமுறை தலைவர்களை ஊக்குவிப்பது, அவர்களை வலுப்படுத்த இந்த சப்மிட்டில் பல்வேறு கலந்துரையாடல்கள், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் கிடைக்கும் படி அமைக்கப்பட்டது.
சமீபத்தில் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தின் First Look வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும்.