Home Cinema News ‘மாசாணி அம்மன்’! ஆர்ஜே பாலாஜியின் அடுத்தப்படம் இதுதான்!

‘மாசாணி அம்மன்’! ஆர்ஜே பாலாஜியின் அடுத்தப்படம் இதுதான்!

மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து மாசாணி அம்மன் என்று த்ரிஷாவை வைத்து படம் எடுக்கிறார் ஆர்ஜே பாலாஜி.

by Sruthi Balasubramanian

ரேடியோ நிகழ்சித் தொகுப்பாளராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர் ஆர்ஜே பாலாஜி. இவர் நயன்தாராவுடன் நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் பயங்கர ஹிட் ஆக, இப்போது இந்த படத்தின் பார்ட்-2-வுக்குத் தயாராகிவிட்டார்.

Mookuthi amman

இந்தப் படத்துக்காக நயன்தாராவிடம் பேச, நயன்தாரா இதில் விருப்பம் இல்லை என மறுக்க, த்ரிஷாவிடம் கதையைச் சொல்லி ஓகே வாங்கிவிட்டார் ஆர்ஜே பாலாஜி. ‘மாசாணி அம்மன்’ என இந்தப்படத்துக்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள். த்ரிஷா அம்மனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பேய் படங்களில் நடித்திருக்கிறாரே தவிர இதுவரை த்ரிஷா அம்மனாக நடித்ததில்லை. இதற்காகவே த்ரிஷாவுக்கு அம்மன் கெட்அப் எல்லாம் போட்டுப்பார்த்து, போட்டோஷூட் எல்லாம் எடுத்தப்பிறகே தயாரிப்புத் தரப்பு திருப்தியாகியிருக்கிறது. 

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க இருக்கும் இந்தப்படத்தின் ஷுட்டிங் ஜூலை மாதம் தொடங்க இருக்கிறது. ஆர்ஜே பாலாஜி இந்தப்படத்துக்கும் இணை திரைக்கதை எழுதியிருக்கிறார். 

Trisha Picture

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.