இயக்குனர் எஸ்.எம்.பாண்டி இயக்கி சத்யா நடித்துள்ள ‘ராபர்’ திரைப்படத்தின் ட்ரைலர் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது மற்றும் இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்திற்கான கதை திரைக்கதை வசனம் ஆகியவற்றை மெட்ரோ படத்தின் இயக்குனரான ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார். மேலும் இப்படத்தின் கதாநாயகனான சத்யா ஏற்கெனவே மெட்ரோ படத்தியுலும் நடித்துள்ளார். இப்படத்தில் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
Happy to launch the intense trailer of #ROBBER #ராபர் 💥https://t.co/8KeuxLW1E1#ROBBER movie will be released worldwide on MARCH 14th
— VijaySethupathi (@VijaySethuOffl) February 19, 2025
By @SakthiFilmFctry @sakthivelan_b
Best wishes to the team.
Directed by @itsSMPandi
Story & screenplay by #Metro & #Kodiyiloruvan director… pic.twitter.com/lZzCNs53A3
இப்படத்தின் ட்ரைலர் மூலம் இப்படம் பெண்களை ஏமாற்றி கொள்ளையடித்து கொலை செய்வதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்று தெரிகிறது. மேலும் இப்படம் சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்தப்படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளும் உள்ளன. இப்படம் கொள்ளையடித்து கொலைசெய்பவரை பற்றிய தகவல்கள் திரட்டும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய ஒரு பரபரப்பான காட்சிகளை கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. மேலும் இப்படத்திலன் மூலம் சமூகத்தில் நடக்கும் சில அநீதிகளை பற்றிய கருத்து வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்திற்கான முதல் பார்வையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் ட்ரைலரும் வெளியீட்டு தேதியும் வெளியாகியுள்ளது. இப்படம் சமூகத்தில் நடக்கும் ஒரு தவறை வெளிக்கொண்டு வரும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராபர் படக்குழு
நடிகர்கள் | சத்யா, தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் |
இயக்குநர் | எஸ்.எம்.பாண்டி |
கதை, திரைக்கதை, வசனம் | ஆனந்த கிருஷ்ணன் |
இசையமைப்பாளர் | ஜோகன் சிவனேஷ் |
கலை இயக்குநர் | பி.சரவணன் |
வெளியீட்டு தேதி | 14 மார்ச் 2025 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]