நடிகர், தொகுப்பாளர், RJ மற்றும் இயக்குனரான பாலாஜி விரைவில் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகின. அதை உறுதி செய்யும் விதமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் RJ பாலாஜி. மேலும், நவம்பர் 27,2024 அன்று “Suriya 45” என்று தலைப்பை வைத்து படத்திற்கான பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் viral ஆனது.
அடுத்தடுத்த Updates!!
‘Suriya 45’ படத்தின் அப்டேட் எப்போது வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு வியப்பளிக்கும் வகையில் நேற்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான Dream Warriors Pictures, ஒளிப்பதிவாளர் GK விஷ்ணு படத்தில் இணைந்துள்ளதை போஸ்டர் மூலம் தெரிவித்தனர். இவர் இதற்கு முன் “மெர்சல், ஜவான், Krack, கில்லாடி” போன்ற திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Suriya 45-ல் Sai Abhyankkar!
இன்று, “Suriya 45” படத்தின் இசையமைப்பாளர் ஆக இணையத்தில் உலா வரும் இசை ரசிகர்களை காந்தம் போன்று ஈர்க்கும் தனது புதுமையான பாடல்கள் வாயிலாக கலக்கிவரும், கோலிவுட்டின் முன்னணி பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி தம்பதிகளின் மகனான Sai Abhyankkar இணைந்துள்ளார். Gen Z தலைமுறைகள் கொண்டாடும் Sai Abhyankkar ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எழுத்தில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் “Benz” என்ற திரைப்படத்திலும் இசையமைப்பாளராக கோலிவுட்டுக்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.