கடந்த 2022-ல் தண்ணீர் அரசியலை வைத்து வெளியாகி நல்லவரவேற்பை பெற்ற படம் Sardar. தற்போது அதன் 2-வது பாகத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.
PS. மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், GV. பிரகாஷ் இசையில், கார்த்தி, ராசி கன்னா, லைலா, ராஜீஷா விஜயன், முனீஷ்காந்த், யூகி சேது ஆகியோர் நடிப்பில் 2022-ல் வெளியான படம் Sardar.

கார்த்தி, ஏஜென்ட் சந்திர போஸ், இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷ் என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார்.
படம் முழுக்க போராட்டம், தண்ணீரை வைத்து உலக அளவில் ஏற்படும் பிரச்சனைகளை கொண்டு ஆச்சரியப்படும் வகையில் எடுக்கப்பட்டது. பெரிய அளவில் வரவேற்பை பெற்று 100 கோடி வரை வசூல் செய்தது.

தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம், Sardar 2 ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. PS. மித்ரன் இயக்கத்தில், கார்த்தி ஹீரோவாக நடிப்பது உறுதியான நிலையில் வில்லனாக நடிப்பின் மான்ஸ்டர் SJ. சூர்யா நடிக்கவுள்ளார். முதல் முறை கார்த்தி மற்றும் SJ. சூர்யா கூட்டணி சேர்ந்து நடிப்பது கலக்கல் காம்பினேஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்தில் 3 ஹீரோயின்கள் நடித்திருந்த நிலையில் Sardar 2 படத்திலும் 3 ஹீரோயின்கள் நடிப்பதாக தகவல் வெளியானது. முதல் ஹீரோயின் ஆக மாளவிகா மோகனன் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அடுத்த ஹீரோயின் ஆக கன்னட, தெலுங்கு நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பெரும்பாலும் தெலுங்கு, கன்னட சினிமாவில் நடித்து வந்த நிலையில் தமிழில் அதர்வா நடிப்பில் வெளியான பட்டத்து அரசன் படத்தில் நடித்திருந்தார்.
Birthday wishes to @AshikaRanganath. We are pleased to welcome her onboard for #Sardar2.@Karthi_Offl @iam_SJSuryah @Psmithran @MalavikaM_ @Prince_Pictures @lakku76 @venkatavmedia @thisisysr @george_dop @rajeevan69 @dhilipaction @editorvijay @paalpandicinema @prosathish… pic.twitter.com/WSfwhmvvkk
— Prince Pictures (@Prince_Pictures) August 5, 2024
சித்தார்த் நடிப்பில் இனி வரவிருக்கும் Miss You படத்திலும் லீட் ரோலில் நடிக்கவுள்ளார்.
Sardar 2 படத்தில் ஆஷிகா ரங்கநாத் நடிக்கவிருப்பதை அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி படத்தில் நடிக்கவிருப்பதாக பிரின்ஸ் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

முதல் பாகத்திற்கு GV. பிரகாஷ் குமார் இசையமைத்த நிலையில் Sarkar 2 -வது பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
சமீபத்தில் சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்த சர்தார் 2 பட ஷூட்டிங்கில் ஆக்ஷன் காட்சி ஒன்றில் எந்தவித உயிர்காக்கும் உபகரணமின்றி சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்ப்பாராத விதமாக 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. ஏழுமலை அவர்கள் மேலிருந்து கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டு, நுரையீரலில் ரத்தகசிவு ஏற்ப்பட்டு உயிரிழந்துவிட்டார் என கூறியுள்ளனர். ஏழுமலை அவர்கள் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் கலைஞராக 35 வருடங்களாக இருந்து வருகிறார். இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதற்கு முன்பு இந்தியன் 2 மற்றும் மகாராஜா படப்பிடிப்பின் போது விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]