Home Cinema News மிரட்டலான நடிப்பில் சூரி…கருடன் Trailer வெளியானது…

மிரட்டலான நடிப்பில் சூரி…கருடன் Trailer வெளியானது…

விசுவாசத்தின் மறு உருவமாக garudan படத்தில் சூரி கலக்கியுள்ளார்.

by Sudhakaran Eswaran

விசுவாசத்தின் மறு உருவமாக garudan படத்தில் சூரி கலக்கியுள்ளார்.

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த சூரி பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். அனைவரிடமும் சகஜமாக பேசும் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 1 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். விடுதலை படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தாலும் சூரியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 

Untitled design 18 2

விடுதலை பாகம் 2 ஷூட்டிங் சென்றுகொண்டிருக்கும் நிலையில் தற்போது சசிகுமார் நடிக்கும் “கருடன்” படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த படத்தில் சூரியின் கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது.  

சமீபத்தில் கருடன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, சசிகுமார், வெற்றிமாறன், சூரி, சினேகன், ரோஷ்ணி, ரேவதி சர்மா, வடிவுக்கரசி, மீம் கோபி,  ஆகியோர் கலந்து கொண்டனர். 

வெற்றிமாறன் கதையில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், கிராஸ் ரூட் திரைப்பட நிறுவனம் தயாரிப்பில் மே 31-ஆம் தேதி “கருடன்” படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஏற்கனவே எதிர்நீச்சல், காக்கிசட்டை, கோடி, பட்டாசு போன்ற படங்களை இயக்கியுள்ளார் துரை செந்தில்குமார். சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன், ரோஷ்ணி, ரேவதி சர்மா, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

“நம்ம ஆசைப்பட்ட ஒரு விசயத்திற்க்காக தப்பான வழியில் போன கடவுளும், இயற்கையும் அதை சரியான வழியில் முடித்து வைக்கும்” என பின்னணி குரலில் Trailer தொடங்கியது. சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவரும் நண்பர்களை இருந்து வருகின்றனர். சூரி உன்னி முகுந்தனிடன் தீவிர விசுவாசியாக (சொக்கன் கதாபாத்திரத்தில்) சிறு வயதியிருந்தே இருந்து வருகிறார்.  ஆக்சன், காதல், செண்டிமெண்ட் என சூரி நடிப்பில் மிரட்டியிருப்பார். 

Trailer பார்க்கும்போது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்துக்கொண்டுள்ளனர் ரசிகர்கள்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.