Home Cinema News 38 ஆண்டுகள் கழித்து Super Star  படத்தில் “Sathyaraj”…

38 ஆண்டுகள் கழித்து Super Star  படத்தில் “Sathyaraj”…

"என்னமா கண்ணு சௌக்கியமா, ஆமாமா கண்ணு சௌக்கியம் தான்" மீண்டும் ஒன்று சேரும் ரஜினிகாந்த், சத்யராஜ் கூட்டணி...இந்த முறை வில்லனாக அல்ல. நண்பனாக...

by Sudhakaran Eswaran

“என்னமா கண்ணு சௌக்கியமா, ஆமாமா கண்ணு சௌக்கியம் தான்” மீண்டும் ஒன்று சேரும் ரஜினிகாந்த், சத்யராஜ் கூட்டணி…இந்த முறை வில்லனாக அல்ல. நண்பனாக…

ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து அக்டோபர் மாதம் படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது. ரஜினி, அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், கிஷோர், ரோகிணி, ராவ் ரமேஷ் என நடிகர்கள் பாட்டாளமே நடித்துள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ரஜினியின் 170-வது படமான வேட்டையனை லைகா ப்ரொடக்சன் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். 

சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. “கூலி” என்று பெயரிட்டுள்ள அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அனிருத் இசையமைக்கவுள்ளார். 

வேட்டையன் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் அடுத்த மாதம் கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக தெரிகிறது. கமல், விஜய், கார்த்தி ஆகியோரை வைத்து LCU-வை உருவாக்கி தமிழ் சினிமாவில் புதிய பரிமாணத்தை தந்தார் லோகேஷ். அதே போல ரஜினியை வைத்து ஒரு மாஸ் ஹிட் தருவார் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.   

Untitled design 3 12

படத்தில் ஒரு சில நடிகர்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சத்யராஜ் கூலி படத்தில் நடிப்பதும் உறுதியாகியுள்ளது. இதற்க்கு முன்பு தம்பிக்கு எந்த ஊரு, மூன்று முகம், நான் சிகப்பு மனிதன், பாயும் புலி, மிஸ்டர் பாரத் போன்ற படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் சத்யராஜ். மிஸ்டர் பாரத் படத்தில் “என்னமா கண்ணு சௌக்கியமா” என்ற பாடல் அனைவரையும் ரசிக்க வைத்தது.  

அதற்க்கு பின்னர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்து விட்டார் சத்யராஜ். மீண்டும் கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் கழித்து தற்போது கூலி படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுவரை ரஜினிக்கு வில்லனாக நடித்து வந்த சத்யராஜ் இந்த படத்தில் நண்பனாக நடிக்கவுள்ளார். இது புது காம்பினேஷன் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.