சில நடிகர்கள் வில்லன் ரோல்க்கு என்று அளவு எடுத்து வைத்தது போல வில்லன் கதாப்பாத்திரத்தில் மிக கச்சிதமாக நடித்து வந்தனர். அந்த வகையில் Sathyaraj நடித்த சில வில்லன் ரோல்கள் ஹீரோக்கு இணையாக ரசிக்கப்பட்டது.
திரைப்படம் என்றால் ஹீரோ, ஹீரோயின்-க்கு அடுத்தபடியாக வில்லன் கதாப்பாத்திரம் இருந்தே ஆக வேண்டும் என்பது தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி. மிக குறைந்த படங்களில் மட்டுமே வில்லன் கதாப்பாத்திரம் என்பது இல்லாமல் இருக்கும். ஆனால் 95% வில்லன் ரோல் இருந்தே தீரும். அந்த வகையில் சில நடிகர்கள் வில்லன் ரோல்க்கு என்று அளவு எடுத்து வைத்தது போல வில்லன் கதாப்பாத்திரத்தில் மிக கச்சிதமாக நடித்து வந்தனர். பிரகாஷ் ராஜ், நாசர், மன்சூர் அலி கான், Sathyaraj, பொன்னம்பலம் போன்றோர் வில்லன் ரோலில் கலக்கியிருப்பார்.
ஒரு சிலர் காலத்திற்கு ஏற்ப வில்லன், ஹீரோ, குணசித்திர பாத்திரம் என மாறி மாறி நடிக்க தொடங்கினர். அந்த வகையில் சத்யராஜ் துணை நடிகராக சினிமாவில் வாழ்க்கையை ஆரம்பித்து வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம், ஹீரோ என ஒரு ரவுண்டு கலக்கியுள்ளார்.
ஹீரோவாக நடித்து பெயர் வாங்கியதை விட வில்லனாக கலக்கியிருப்பார். ஒரு சில படங்களில் Sathyaraj வில்லன் ரோலில் நடித்தது ஆண்டுகள் ஆனாலும் பார்த்து ரசிக்கும் படியாக வில்லனாக மிரட்டியிருப்பார்.
1984-ல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான “நூறாவது நாள்” படத்தில் “ஜெகநாதன்” கதாபாத்திரத்தில் துணை நடிகராக மொட்டை அடித்துக்கொண்டு நடித்திருப்பார். மொட்டை அடித்துக்கொண்டு, குளிங்கிளாஸ் போட்டுகொண்டு, சிவப்பு கோர்ட்டில் வந்து நிக்கும் போது மிக பயங்கரமாக வில்லனுக்கு உரித்தான கெட்டப்பில் மிரட்டியிருப்பார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் துணை நடிகராக நடித்து வந்த சத்யராஜ் முழு நேர வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
1985-ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “பகல் நிலவு” படத்தில் பண்ணையார்(பெரியவர்) ஆக நடித்திருப்பார். ஊரில் வேலை செய்யும் ஏழை மக்களின் உழைப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் பண்ணையாராக இருப்பார். வயதான கெட்டப்பில் மிடுக்கான உடை, திமிரான பேச்சு என வில்லனுக்கு உண்டான தோரணையில் அசத்தியிருப்பார்.
இதற்க்கு முன்பு வரை வில்லனாக மட்டும் கலக்கியிருந்த சத்யராஜ் “காக்கிசட்டை” படத்தில் தனக்கென்று ஒரு வசனத்தை கூறி பிரபலப்படுத்தினார். “விக்கி” கதாபாத்திரத்தில் எதார்த்த பேச்சு மூலம் வில்லனாக கலக்கியிருந்தாலும் “தகடு தகடு” என்ற ஒற்றை வசனம் சத்யராஜின் வில்லன் கதாபாத்திரத்தை மேலும் ரசிக்க வைத்திருப்பார். இன்று வரை சத்யராஜ் கூறிய “தகடு தகடு” வசனம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கமலின் விக்ரம் படத்தில் “சுகிர்தராஜ்” என்ற வித்தியாசமான பெயரில் வித்தியாசமான கெட்டப்பில் கமலுக்கு இணையாக இந்த படத்தில் கலக்கியிருப்பார். மிக கொடூரமான பயங்கரவாதியாக குளிங்கிளாஸ் போட்டுகொண்டு “வா யா விக்ரம்”, “இப்படி பொசுக்கு பொசுக்குன்னு மாட்டிக்கிறயே” என சத்யராஜ்யின் நக்கல் பேச்சும், எதார்த்த நடிப்பும் ரசிக்க வைக்கும். குளிங்கிளாஸ்-ல் ஒரு பக்கம் வெள்ளை கண்ணாடியும், மறுபக்கம் கருப்பு நிற கண்ணாடியும் போட்டு கொண்டு பேசும் நக்கல் வசனங்கள் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.
தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்த படங்கள் எத்தனையோ வந்துள்ளன, இனிமேல் வந்தாலும் மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணியில் வந்த “அமைதிப்படை” படத்திற்கு ஈடாகாது. அரசியல் என்பது என்ன, அதை எவ்வாறு அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள், அரசியலின் நிலை என அனைத்தையும் எதார்த்தமாக இவர்களது கூட்டணியில் காட்டியிருப்பார்கள். “அம்மாவாசை” to நாகராஜா சோழன் MLA என நடிப்பில் வித்தியாசம் காட்டி மிரட்டியிருப்பார். அரசியல் ஆசை கொண்டவர்கள் தனது பதவிக்காக எந்த அளவுக்கும் செல்வார்கள் என்பதை எதார்த்தமாக காட்டியிருப்பார்.
நக்கல் பேச்சிற்கு பெயர்போன சத்யராஜ் வில்லாதி வில்லன் படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் பூ கதாப்பாத்திரம் மற்றுமொரு மாஸ்டர் பிஸ் என்றே கூறலாம். ஒரு கண் நார்மல் ஆகவும், மற்றொரு கண் வித்தியாசமாக பூனை கண் போலவும் இருக்கும். இதனால் பூ என்ற பெயரில் சத்யராஜ் செய்யும் அலப்பறைகள் இவ்வளவு தான் என்று இல்லை. மணிவண்ணனிடம் பவ்வியமாகவும் , மற்றவர்களிடம் மணிவண்ணனை கிண்டல் செய்தும், திட்டியும் பேசும் பேச்சு சத்யராஜ் என்ற ஒருவரால் மட்டுமே அப்படி நடிக்க முடியும் என்ற அளவிற்கு நடித்திருப்பார்.
மேலும் ஒரு சில படங்களில் இவரது நடிப்பு ரசிக்கும் படியாக இருந்தது. வில்லனாக நடிப்பது மிக சுலபன ஒன்று. ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பதை மிகவும் விரும்புவதாக சத்யராஜ் பல முறை கூறியிருப்பார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]